EPF Aadhaar Linking: நீட்டிக்கப்பட்டது காலக்கெடு, முழு விவரம் உள்ளே

EPF-Aadhaar Linking: EPFO, அதில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகள் மற்றும் யுஏஎன் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதியை EPFO, செப்டம்பர் 1, 2021 வரை நீட்டித்துள்ளது (EPF-Aadhaar Linking Deadline Extended). 

இதற்கு முன்னர் இதன் கடைசி தேதி ஜூன் 1 ஆக இருந்தது. நீங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகள் மற்றும் யுஏஎன் கணக்குடன் இணைக்கவில்லை என்றால், நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். சில நாட்களுக்கு முன்பு, ஆதார் மற்றும் பான் இணைப்பதற்கான காலக்கெடுவையும் அரசாங்கம் நீட்டித்தது.

1 /4

EPFO-வில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. ஆதார் எண்ணை (Aadhaar Number) பிஎஃப் கணக்குகள் (PF Account) மற்றும் யுஏஎன் எண்ணுடன் (UAN Number) இணைப்பதற்கான கடைசி தேதியை 2021 செப்டம்பர் 1 வரை நீட்டித்துள்ளது (EPF-Aadhaar Linking Deadline Extended). இப்போது வரை இதன் கடைசி தேதி 2021 ஜூன் 1 ஆக இருந்தது. நீங்களும் உங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகள் மற்றும் யுஏஎன் கணக்குடன் இணைக்கவில்லை என்றால், விரைந்து அதை செய்து முடியுங்கள். 

2 /4

நீங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகள் மற்றும் யுஏஎன் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்து விடுங்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆதார் மற்றும் பான்-ஐ இணைப்பதற்கான கடைசி தேதியை அரசாங்கம் முன்பே நீட்டித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.   

3 /4

ஈபிஎஃப்ஒ வெளியிட்ட உத்தரவின்படி, ஆதார் சரிபார்க்கப்பட்ட யுஏஎன் உடன் பிஎஃப் வருமானத்தை சம்ர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 1, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மே 3 ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதில் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆதார் எண் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பிறகே EPFO ​​காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 

4 /4

மார்ச் 31 அன்று, சிபிடிடி ஆதார் மற்றும் பான் இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30 வரை நீட்டித்தது. அறிக்கையின்படி, இணைக்கும் தேதி நீட்டிக்கப்படுவது இதுவே கடைசி முறையாகும். ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.