இபிஎஃப்ஓ ஆனது அதன் ஊழியர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கக்கூடிய வகையில் புதிய இ-பாஸ்புக் திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தனது ஊழியர்கள் அவர்களின் கணக்கிலுள்ள தொகை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வகையில் இ-பாஸ்புக் வசதியினை முன்னரே அறிமுகப்படுத்தியுள்ளது.
இ-பாஸ்புக்கினை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது கணக்கின் முழு விவரங்களையும் கிராஃபிக்ஸ் முறையில் பார்க்கக்கூடிய மேம்பட்ட வசதியினை தற்போது இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தியுள்ளது.
இ-பாஸ்புக் வசதியினை அறிமுகப்படுத்தியதிலிருந்து ஊழியர்கள் இபிஎஃப்ஓ அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே அவர்களுக்கு தேவையான விவரங்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்கின்றனர்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (இபிஎஃப்ஓ) தனது ஊழியர்களின் நலனுக்காக ஆன்லைன் மூலம் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2023ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக நிர்ணயம் செய்து இருக்கின்றது.