நமது நாட்டில் குளிர்காலம் துவங்கி விட்டது. குளிர்காலத்துக்கு ஏற்ப நீங்கள் உணவுகள் மற்றும் பழங்களையும் மாற்றிக் கொள்வீர்கள். உங்கள் குடும்பத்திற்கும், உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் நன்மை பயக்கும் குளிர்கால காய்கறி ஜூஸ்கள் என்ன என்று பார்ப்போம் வாங்க.
கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் இரும்புச்சத்தும் நல்ல அளவில் உள்ளது. எனவே கீரை ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கேரட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் கேரட்டில் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நன்மை பயக்கும். கேரட்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் சாறு பருகுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பாகற்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பீட்ரூட்டில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பீட்ரூட் சாறு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
முட்டைக்கோஸ் பொதுவாக நூடுல்ஸ் மற்றும் பல உணவுகளில் சேர்க்கப்படுகிறது. முட்டைகோஸை ஜூஸ் வடிவில் செய்து குடிக்கலாம். முட்டைக்கோஸ் உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் ஆக்குகிறது.