ஜோதிகா, இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை சகோதரி ஆவார். பொதுவான தாய் சீமா. நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஜோதிகா கடைசியாக பொன்மகள் வந்தாள் இல் நடித்தார். கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்காக போராடும் படத்தில் அவர் ஒரு வழக்கறிஞராக நடித்தார். அவரது ஐந்து சிறந்த நடிப்புகளைப் பார்க்கிறோம்.
நாச்சியார் பாலாவின் இயக்கத்தில், ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் படம்.
மொழி, 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம். எசு. பாசுகர் முதலானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்மொழித் திரைப்படமாகும். பி. வாசு இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர்.
பேரழகன் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சசி சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா (மாறுபட்ட இரு வேடங்களில்), ஜோதிகா (மாறுபட்ட இரு வேடங்களில்), மற்றும் விவேக், மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர்.
குஷி 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய், ஜோதிகா நடித்த இப்படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கினார்.