Astro Remedies In Tamil: பொருளாதார பிரச்னைகள், வாழ்வில் துன்பங்கள் ஓடி போக வெள்ளிக்கிழமைகள் தோறும் இந்த 5 விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் மகாலட்சுமி தேவியின் (Goddess Laxmi) அனுக்கிரகம் உங்கள் பக்கம் திரும்பும்.
வாழ்வில் பெரும்பாலான பிரச்னைகளுக்கும், கவலைகளுக்கும், பயத்திற்கும் பணம் ஒரு பெரிய பங்கை அளிக்கும். ஒருவர் தன் வாழ்வில் பொருளாதார பிரச்னைகள் (Financial Problems) இல்லாமல் இருந்தால் பாதி கவலை ஓடிவிடும். அந்த வகையில், செல்வத்தின் கடவுளாக அறியப்படும் லட்சுமி தேவியை (Goddess Laxmi Devi) நோக்கி, அவருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் (Friday) வழிபடுவது உங்களுக்கு சிறப்பான நன்மையை கொண்டுவரும்.
பொருளாதாரத்தில் பிரச்னை இல்லாமல் இருக்கவும், செல்வத்தை பெருக்கவும் மகாலட்சுமியை (Goddess Laxmi Devi) வழிபாடு செய்ய வேண்டும் . அதுவும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து லட்சுமி தேவியை வழிபட்டால் உங்களுக்கு செல்வம் மட்டுமின்றி மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் இரட்டிப்பாக இருக்கும்.
அந்த வகையில், பொருளாதார பிரச்னைகள் (Financial Problems) தீர, செல்வம் பெருக பக்தர்கள் வெள்ளிக்கிழமைகளில் இந்த 5 விஷயங்களையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இதனை மனப்பூர்வமாக பின்பற்றும்பட்சத்தில் நிச்சயம் அனைத்தும் கைக்கூடி வரும்.
லட்சுமி தேவிக்கு வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்கள் உகந்தது. எனவே, லட்சுமி தேவியை தாமரை, ரோஜோ பூக்களை கொண்டு வழிபாடு செய்யவும். இதன்மூலம், லட்சுமி தேவியின் அனுக்கிரகம் வரும், நினைத்ததெல்லாம் நடக்கும்.
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலமான இடத்தில் இருக்க, வெள்ளிக்கிழமைகளில் (Friday Astro Remedies) காலையிலேயே குளித்து, நன்கு தியானம் செய்து, வெள்ளை உடைகளை அணிந்துகொள்ளுங்கள். வெள்ளை ஆடைகளை தானம் செய்வது உகந்தது ஆகும். அதே நேரத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கும் அரிசு, மாவு, பால், தயிர் போன்றவற்றையும் தானம் செய்யலாம். இதனால் தடைப்பட்டு இருந்த அனைத்தும் சீராகும்.
குறிப்பாக உங்களின் பொருளாதார பிரச்னை தீர வேண்டும் என்றால் மகாலட்சுமியை மனதார நினைத்து வெள்ளிக்கிழமைகளில் வழிபடுங்கள். வழிபடும்போது அரிசி சாதம், தேங்காய் ஆகியவற்றை பிரசாதமாக வழங்குங்கள். இது உங்களின் வருவாயை அதிகரிக்க உதவும்.
மகாலட்சுமியின் பார்வை உங்கள் பக்கம் திரும்ப, தாமரை விதைகள் அடங்கிய ஜெபமாலையை வைத்து அவரின் திருநாமத்தை உச்சரித்தபடியே வழிபடவும். அதுவும் குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில்...
வாழ்க்கையில் தீராத கவலை, சோதனைகள் அடுத்தடுத்து வந்தால் மகாலட்சுமியை நோக்கி தொடர்ச்சியாக 16 வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் (Laxmi Devi Viradham) இருக்கும். விரதம் இருப்பதன் மூலம் நீங்கள் வேண்டியது அனைத்தும் நினைவேறும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.