Astro Traits: தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கும் திறன் கொண்ட ‘சில’ ராசிப் பெண்கள்!

ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் இயல்பு, ஆளுமை, குறைபாடுகள் மற்றும் குணங்கள், அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார் போன்றவற்றை ராசிகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிகளின் ஆண்களும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் என்பதோடு புத்திசாலிகள் என்றும், அவர்கள் தங்கள் விருப்பப்படி உலகை ஆட்டி வைக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

1 /6

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட குணங்கள் மற்றும் இயல்புகள் உள்ளன. இந்நிலையில் ஜோதிடத்தில், சில ராசிப் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதோடு புத்திசாலிகள் என்றும், அவர்கள் தங்கள் விருப்பப்படி உலகை ஆட்டி வைக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.  அத்தகைய ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /6

மேஷ ராசி பெண்கள் புத்திசாலிகள். அனைவரையும் அரவணைத்துக் கொண்டு தனது வேலையை எப்படி செய்வது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அவள் தன் அப்பாவி முகத்துடன் மக்களை தன் மக்கள் இழுக்கும் திறன் பெற்றவள். எனினும், சில சமயங்களில் சோம்பேறித்தனத்தால் நல்ல வாய்ப்புகள் வீணாகும். திருமண வாழ்வில் இவர்கள் சில சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.

3 /6

கடக ராசி பெண்கள் அமைதியான தோற்றத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் அறிவில் மிகவும் கூர்மையானவர்கள். அவள் எல்லாவற்றையும் மிக விரைவாக புரிந்துகொள்கிறாள். அதுமட்டுமின்றி, வரப்போகும் ஆபத்தை உணரும் திறனும் அவர்களுக்கு உண்டு. அவர்கள் தங்கள் இலக்குகளை எளிதாக அடைகிறார்கள். ஆனால் அதீத சிந்தனையால் சில சமயம் நஷ்டமும் அடைகின்றனர்.

4 /6

சிம்ம ராசி பெண்கள் சற்று சுயநலவாதிகள். தனக்கு பலன் தரும் காரியத்தை மட்டுமே செய்வார்கள். எப்பொழுதும் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அவர்கள் தங்கள் தொழிலில் பெரிய வெற்றியை அடைகிறார்கள். எனினும், சிம்ம ராசிப் பெண்களுக்கும் சில பலவீனங்கள் இருக்கும், சில சமயங்களில் மற்றவர்களின் அறிவுரைகளை புறக்கணிப்பார்கள்; அல்லது வார்த்தைகளால் காயப்படுத்துவார்கள். அதனால் அவர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும்.

5 /6

விருச்சிக ராசி பெண்கள் தங்கள் வேலையை மிகவும் அமைதியாகச் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவளது அறிவும் மனமும் மிக வேகமாக வேலை செய்யும் திறன் பெற்றது. அவள் எல்லாவற்றின் ஆழமாக படித்து அறிய விரும்புகிறாள். அவர்கள் தங்கள் விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பதில் வல்லவர்கள். அவள் ஒரு நல்ல தோழியாகவும் மனைவியாகவும் இருப்பாள். த்ன் அறிவுத் திறனால் மற்றவர்களுக்கு உபயோக இருக்க நினைப்பாள்.  

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.