ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்

Guru Udhayam Palangal: சுப கிரகமான குரு பகவான் செல்வம், கல்வி, அறிவு, திருமணம், குழந்தைகள், தொண்டு போன்றவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இன்னும் சில நாட்களில் குரு உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவு:ள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Guru Udhayam Palangal: சனி பெயர்ச்சியை போலவே குரு பெயர்ச்சிக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். தற்போது அஸ்தமன நிலையில் உள்ள அவர் ஜூன் 6 ஆம் தேதி உதயமாவார். ஜூன் உதயத்தால் 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இங்கே காணலாம். 

1 /13

மேஷம்: மேஷம் ராசிக்காரர்களுக்கு குரு உதயத்தின் தாக்கத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். 

2 /13

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலத்தில் தளர்ந்து போகாமல் உத்வேகத்துடன் இருக்க வேண்டும். அனைத்து பணிகளையும் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

3 /13

மிதுனம்: குரு உதயத்தின் தாக்கத்தால் இந்த காலத்தில் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிரிகளின் வலையில் சிக்க நேரிடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

4 /13

கடகம்: கடக ராசிக்கார்ரகளுக்கு இது மிகவும் நல்ல நேரம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் முன்னேற்றம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஆகியவை இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

5 /13

சிம்மம்: குரு உதயத்தின் தாக்கத்தால் உங்கள் வேலைகளில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு உதயம் மற்றும் குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். 

7 /13

துலாம்: குரு உதயத்தின் தாக்கத்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உங்கள் பணியிடத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

8 /13

விருச்சிகம்: இந்த காலத்தில் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பணி இடத்தில் சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

9 /13

தனுசு: குரு உதயத்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை செய்பவர்கள் பணி இடத்தில் கவனமாக இருக்க வேண்டும், குழந்தைகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

11 /13

கும்பம்: குரு உதயத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

12 /13

மீனம்: குரு உதயத்தால் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.