Shocking HCL Healthcare Study : நோய் தொடர்பாக ஆராய்ச்சிகள் வெளியிடும் முடிவுகளில் சில அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகின்றன. அண்மையில் ஹெல்த்கேர் நடத்திய ஆய்வில், ஐடி செக்டாரில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான ஆபத்துகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது...
தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களில் 61 சதவிகிதத்தினருக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் நோக்கம் இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நோய்தடுப்பு பராமரிப்புக்கான வளர்ந்து வரும் தேவையை முன்னிலைப்படுத்துவது...
அதிக கொலஸ்ட்ரால் என்பது இதயத்தை பலவீனப்படுத்தும் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு தீவிர மருத்துவ நிலை ஆகும்.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புப் பொருள் அதிகமாக இருக்கும்போது அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. இது முக்கியமாக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, போதுமான உடற்பயிற்சி செய்யாதது, உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல் என பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களில் 61% பேர் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொலஸ்ராலைத் தவிர, சுமார் 22 சதவிகிதத்தினருக்கு உடல் பருமன், 17% நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை ஏற்படுகிறது. இவற்றைத் தவிர, ஹைப்போ தைராய்டிசம் மற்றும் இரத்த சோகை தலா 11% ஐடி ஊழியர்களுக்கும், நீரிழிவு நோய் 7% இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
ஐடி ஊழியர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த விஷயங்களைச் செய்ய வேண்டும்? என்றால் அதில் முதலிடம் உடற்பயிற்சிக்கு என்று பரிந்துரைக்கப்படுகிறது
ஐடி தொழில்துறையில் பணிபுரிபவர்களுக்கு போதுமான தூக்கம் அவசியம், தூக்கம் குறைவதே பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது
சமச்சீரான உணவுமுறையை ஐடியில் வேலை பார்ப்பவர்கள் பின்பற்ற வேண்டும்
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். மருத்துவ ஆய்வறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ மீடியா தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை