தினம் காலை ஊற வைத்த கோதுமை... பல நோய்களுக்கு தீர்வு தரும்..!!

ஊறவைத்த கோதுமை பலன்கள்: தினமும் காலையில் ஊறவைத்த கோதுமையை சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது முதல் உடல் எடையை குறைப்பது வரை பல்வேறு பலன்களை பெறலாம்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் நமது உணவுப் பழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இந்நிலையில், ஊறவைத்த கோதுமையை உண்பதால் கிடைக்கும் நன்மைகளை இன்று சொல்லப்போகிறோம். 

1 /8

மழை காலத்திலும் சரி, கோடை காலத்திலும் சரி, ஊறவைத்த கோதுமை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.மேலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது போன்ற பல நன்மைகளை கொடுக்கிறது. இந்நிலையில் ஊற கோதுமையை எப்படி சாப்பிடுவது மற்றும் அதன் மற்ற நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

2 /8

நீங்கள் முன்பு கோதுமையை சாதம் போல் வடித்தோ அல்லது சப்பாத்தியாகவோ சாப்பிட்டிருக்கலாம். முழு கோதுமை சாப்பிடுவதால் கிடைக்கும் நமன்மைகள் பல. கோதுமையில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் உள்ளன.

3 /8

செரிமானம்: ஊறவைத்த கோதுமையை உண்பதால் செரிமான மண்டலம் வலுவடைகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நல்ல செரிமான செயல்முறையை பராமரிக்க உதவுகிறது. தினமும் ஊறவைத்த கோதுமையை உட்கொள்வதால், மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

4 /8

உடல் பருமன்: ஊறவைத்த கோதுமையை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஊறவைத்த கோதுமையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பசியைக் குறைக்கும். கூடுதலாக, அதன் நுகர்வு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது உடல் பருமனை கட்டுக்குள் வைக்கிறது.

5 /8

இதய ஆரோக்கியம்: ஊறவைத்த கோதுமை இதயத்திற்கு நல்லது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இதன் நுகர்வு உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

6 /8

நீரிழிவு: ஊறவைத்த கோதுமையை உட்கொண்டால், சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதன் நுகர்வு இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் இன்சுலின் திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

7 /8

ஊறவைத்த கோதுமை சாப்பிடும் முறை: இதற்கு ஒரு கைப்பிடி கோதுமையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது தவிர, கோதுமையை ஊறவைத்து சாலட்டில் கலந்தும் சாப்பிடலாம். ஊறவைத்த கோதுமை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.