Benefits of Mushroom: அசைவம் மற்றும் சைவம் என இரு வகையான உணவை உண்பவர்களுக்கும் காளான் மிக பிடித்தமான விஷயமாக உள்ளது. காளானின் சுவை மிகவும் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காளானில் உள்ளன. காளான் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியாக கருதப்படுவதற்கு இதுவே காரணம். அதன் பலன்களை அறியாதவர்கள், அதன் சுவைக்காக மட்டும் அதை உண்பதுண்டு. காளான் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
காளான்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது ஒரு இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பியாக கருதப்படுகிறது. இது நுண்ணுயிர் மற்றும் பிற பூஞ்சை தொற்றுகளையும் குணப்படுத்துகிறது. இதில் உள்ள பண்புகளால், உடலின் செல்களை சீர் செய்கிறது.
காளான்களால் உங்கள் இதயம் ஆரோக்கியமாகிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல வகையான என்சைம்கள் உள்ளன. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும்.
நீரிழிவு நோயாளிகளுக்கும் காளான் மிகவும் நன்மை பயக்கும். காளான்களில் சர்க்கரை இல்லை. உடலுக்கு இன்சுலினை வழங்கவும் இது உதவுகிறது.
காளானை உட்கொள்வதால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்கும். ஃபோலிக் அமிலம் காரணமாக, இது உடலில் இரத்தத்தை உருவாக்கவும் செயல்படுகிறது.
காளான் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் ஆண்டி ஏஜிங் குணங்கள் அதிகமாக உள்ளதால், இது உடலில் வயதாகும் பண்புகளை நிறுத்தி, உங்கள் உடலை எப்போதும் திடமாகவும் ஓலமாகவும் வைத்திருக்கிறது.