Health Benefits of Murungai Kerai: பொதுவாகவே அனைத்து விதமான கீரைகளுமே ஊட்டச்சத்துக்கள் மற்றுக் தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். பசுமை நிறைந்த கீரைகளில், வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னிசியம், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.
முருங்கைக்கீரை, சத்துக்கள் அதிகம் கொண்ட பசுமையான கீரைகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. முருங்கை கீரைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக் கொண்டால், போதும், நரம்பு தளர்ச்சி முதல் நீரிழிவு வரை பல விதமான உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணலாம்.
முருங்கைக்கீரை: முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் மற்றுக் தாதுக்களின் சுரங்கமாக விளங்கும் இதில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
நரம்பு ஆரோக்கியம்: முருங்கை கீரையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் நரம்பியல் பண்புகள், மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. நியூரோடிஜெனரேட்டிவ் நோய்கள் என்னும் நரம்பியம் சார்ந்த நோய்களை தடுப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூட்டு வலி: முருங்கை கீரையில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளதன் காரணமாக உடலில் உள்ள யூரிக் அமிலம் குறைந்து, கீல்வாதத்தின் வலியும் குறையத் தொடங்குகிறது. உடல் முழுவதிலும் உள்ள வீக்கத்தைக் குறைகிறது. எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோஸின் அபாயத்தையும் குறைக்கிறது.
நீரிழிவு: முருங்கைக் கீரை சுகர் லெவலை கட்டுப்படுத்தும் அற்புத உணவு. குளோரோஜெனிக் அமிலம் எனப்படும் நிறமி இருப்பதால், முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
இரத்த சோகை: இரும்பு சத்தின் களஞ்சியமாக கருதப்படும் முருங்கைக் கீரை, இரத்த விருத்திக்கு உதவுகிறது.ஹீமோகுளோபினை அதிகரிக்கும் திறன் உள்ளதால், கோர்வு, பலவீனத்தை நீக்கும் அருமருந்தாக முருங்கைக் கீரை இருக்கும்.
இரத்த அழுத்தம்: உயர் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முருங்கைக் கீரை சிறந்தது. ஒரு ஆய்வில், முருங்கை கீரை வழக்கமாக உட்கொள்வபவர்களுக்கு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டும்குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியம்: முருங்கை கீரையில் காணப்படும் தனிமங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுவதற்கு இதுவே காரணம்.
உடல் பருமன்: அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு முருங்கை கீரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. அதனுடன், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதால், சிறந்த வெயிட்லாஸ் டயட் ஆக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.