Diabetes Diet: நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், நீரிழிவை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் இயற்கையாக கட்டுப்படுத்த முடியும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவை கண், சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உடல் உறுப்புகளை பெரிதும் பாதிக்கும். இன்சுலினை இயற்கையாக சுரக்க செய்யும் உணவுகளை தினமும் சேர்த்துகொண்டால் நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.
இரத்தச் சர்க்கரை அளவை குறைவாகக் கொண்டுள்ள நாவல்பழம், இயற்கையாக இன்சுலினை சுரக்க செய்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாவல் பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.
மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.
பாகற்காயில் உள்ள சாரன்டின் என்ற வேதிப்பொருள், பாலிபெப்டைடு பி என்ற இன்சுலின் சர்க்கரையை அளவை குறைக்கும்.
இலவங்கம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் உணவு உண்பதற்கு முன்னதாக இருக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது
வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இன்சுலினை சுரக்க செய்து சர்க்கரை அளவை சீர் செய்கிறது.
ஆக்ஸிஜனேற்றங் பண்புகளைக் கொண்டுள்ள நெல்லிக்காய்மிக குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்டது. இது இன்சுலினை சுரக்க செய்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.