Horoscope 2022 JUNE 11: நாளும் கோளும் இறைவனின் முன் ஒன்றும் செய்யாது என்றாலும் எச்சரிக்கையுடன் நாவடகத்தை கடைபிடிப்பது நல்லது தானே? இது சிம்ம ராசிக்கு இன்றைய ஜோதிடம் சொல்லும் எச்சரிக்கை
நீங்கள் சமீப காலமாக கொஞ்சம் தனிமையாக உணர்கிறீர்களா? உங்கள் நண்பர்கள் உங்களை அணுகவில்லை என்று நினைக்கிறீர்களா? அது தவறு. அவர்கள் பிஸியாக இருக்கலாம். உண்மையில் எதுவும் தவறாக இல்லை என்பதை உணரும் நாள் இது.
இன்று விஷயங்களைக் ஆராய நேரம் ஒதுக்குங்கள். முன்பே இருக்கும் நிலைமையை வைத்து எந்த முடிவும் எடுக்கவேண்டாம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் எல்லாவற்றையும் எல்லா கோணங்களிலும் பாருங்கள். உங்கள் உள்ளுணர்வு பொதுவாக வலுவாக இருக்கும், ஆனால் இன்று கவனமாக இருப்பது நல்லது.
இன்று நீங்கள் பழைய நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களை நம்ப வேண்டியிருக்கும். புதிய நண்பர்களை உருவாக்குவது நல்ல விஷயம், ஆனால் இன்று புதிய நபர்கள் உங்களுக்கு பிரச்சனையாக மாறலாம்
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள், இன்று யாரோ ஒருவர் உங்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க முயற்சிக்கலாம். இந்த நபர் உங்கள் வாழ்க்கையில் எந்த காரணமும் இல்லாமல் தலையிடுகிறார் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.
இன்று உங்கள் சொந்த விஷயத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுங்கள். மற்றவர்களின் விச்யத்தில் தலையிட நீங்கள் விரும்புவது அவர்களின் நன்மைக்காக செய்கிறீர்கள் என்று எதிரில் இருப்பவருக்கு புரியாது.தேவைப்பட்டால், ஆதரவு கொடுக்கும் வேலையை மட்டும் செய்தாலே போதுமானது.
இப்போது மக்கள் உங்களுக்கு எதிராக இருப்பதை உணரலாம். இருப்பினும் அனைவருக்கும் பாதுகாப்பற்ற கட்டங்கள் உள்ளன என்பதால் இதுவொன்றும் நீடிக்கும் சூழல் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்கள் உங்களை நேசிக்கிறார்கள், அவர்கள் உங்கள் வேலையை நேசிக்கிறார்கள், நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எந்த காரணத்திற்காகவும் மன சோர்வடையவேண்டாம்
தனுசு ராசிக்காரர்கள் சில சமயங்களில் மிகவும் ஏமாளியாக இருப்பீர்கள், இன்று யாராவது இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் எல்லாவற்றையும் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க மறக்காதீர்கள்.
எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பும் லட்சியவாதிகளான மகர ராசிக்காரர்களே, இன்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க உங்களுக்கு ஒரு சிறந்த நாள்உங்கள் ஆர்வங்களை தெளிவாக வெளிப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்கள் கற்பனை வளம் நன்றாக இருக்கலாம். அதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். உங்களுக்கு முன்னால் இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள், முதலில் அவற்றைச் சமாளிக்கவும், பின்னர் மற்றவ பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கவும்.
இன்று வீட்டு வாடகை அல்லது வேலை ஒப்பந்தம் போன்ற முக்கியமான எதிலும் கையெழுத்திட வேண்டாம். இன்று நீங்கள் இதுபோன்ற விஷயங்களை தவிர்ப்பது, எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கலை உருவாக்கமால் இருக்கும் ரிஷப ராசிக்காரரே.
இன்றைய நாள் உங்களுக்கு சர்க்கரையாய் இனிக்கும் கும்ப ராசிக்காரரே. ஆனால், சற்று அமைதியாக இருப்பதும் அவசரப்படாமல் இருப்பதும் அவசியம்.
இன்றே உங்கள் ஆற்றலைச் சேமித்து வையுங்கள். இன்னெஒரு நாள் உங்கள் பிரச்சினைகளைச் சமாளித்துக் கொள்ளலாம். இன்று எந்த பிரச்சனையையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம். இன்று எச்சரிக்கையாக இருந்தால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.