10 நாளில் தொப்பையை குறைக்க 'பூசணிக்காய்' ஜூஸ் மட்டும் போதும்

பூசணிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இந்த பூசணிக்காய் சாறு தொப்பை கொழுப்பு கரைக்கும் பிராசஸூக்கு எந்தளவு பயன்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

உடல் எடையை குறைப்பதும், நச்சுகளை நீக்குவதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். இதற்கு, நீங்கள் பூசணிக்காய் ஜூஸை ட்ரை செய்யுங்கள். வெள்ளை பூசணி சாறு ஒரு அதிசய பானமாகும், இது உடல் எடையை குறைக்கவும், உங்கள் உடலை நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவும். இந்த கட்டுரையில், நாம் வெள்ளை பூசணி சாற்றின் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள உள்ளோம்.

1 /7

மெட்டபாலிசம் ஊக்குவிப்பு: பூசணிக்காய் சாறு  மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, வயிற்று கொழுப்பை எரிக்க உதவுகிறது. அதன் அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம், கொழுப்பை விரைவாக குறைக்க செய்கிறது"   

2 /7

அதிக நார்ச்சத்து: இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படக்கூடும். இதனால், அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடையை நிர்வகிக்க முடிகிறது.  

3 /7

வைட்டமின் சி: பூசணிக்காய் சாற்றில் உள்ள வைட்டமின் சி, தொப்பை கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், இந்தப் பிராசஸை வேகப்படுத்த செய்கிறது.  

4 /7

குறைவான கலோரி: பூசணிக்காய் குறைவான கலோரி உள்ளடக்கத்தை கொண்டிருப்பதால், எடை அதிகரிக்கும் என்கிற பயமின்றி தாராளமாக குடிக்கலாம். இது எடை குறைப்புக்கு உதவக்கூடிய சிறந்த பானமாகும்  

5 /7

ரத்த சர்க்கரை அளவு: இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள், ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவது மட்டுமின்றி உடல் உள்ளுறுப்புகளில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. எடை மேலாண்மையுடன் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த செய்கிறது.   

6 /7

கொழுப்பு எரிக்கும் ஊட்டச்சத்துக்கள்: பூசணிக்காய் சாற்றில் உள்ள வைட்டமின், மினரல் மற்றும் என்சைம் ஆகியவை, கொழுப்பை எரிக்கும் பிராசஸூக்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, அதிலுள்ள ஜிங்க் கடினமான தொப்பையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது  

7 /7

பெஸ்ட் ஃபிட்னஸ் ஜூஸ்: உடற்பயிற்சியுடன் சேர்த்து பூசணிக்காய் ஜூஸூம் குடித்து வந்தால், எதிர்பார்த்த ரிசல்டை விரைவில் காணலாம். குறிப்பாக, உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைத்திட பயன்படுகிறது.