EFPO: நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, PF கணக்கு இருக்கும். EFPO நிர்வகிக்கும் நீண்ட காலசேமிப்பு திட்டமான இதில், அடிப்படை சம்பளத்தின் 24 சதவீத பணம் மாதம் டெபாசிட் செய்யப்படும்.
ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 12 சதவிகித பங்களிப்புடன், பணியில் அமர்த்தியுள்ள நிறுவனம் அல்லது முதலாளியின் சமமான பங்களிப்புடன் மாதாமாதம் டெபாசிட் செய்யப்படும் தொகை, ஓய்வூதிய காலத்தில் கிடைக்கும் மிகச்சிறந்த நிதி கார்பஸ் ஆக இருக்கும்.
EFPO: சம்பளத்திலிருந்து இருந்து, பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் முதலீடு செய்யும் பணத்தை, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம். எனினும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, குறிப்பிட்ட அளவு தொகையை ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் வீடு வாங்க அல்லது வீட்டை புதுப்பிக்க, பழுது பார்க்க பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
சாமானிய மக்களுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்றான வீடு கட்டுதல். உங்கள் பிஎஃப் கணக்கின் மூலம் உங்கள் கனவு எளிதாக நனவாகும். உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க, பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க, தேவையான சில விதிமுறைகளையும், விண்ணப்பிக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஆன்லைனில் EFPO அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது UMANG செயலின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு முதலில் உங்கள் UAN எண்ணுடன் உங்கள் கணக்கில் லாகின் செய்ய வேண்டும்.
உங்கள் கணக்கில் லாக் செய்த பின், Manage என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, அதில் விண்ணப்ப படிவம் 31 நிரப்பி, வீடு வாங்குதல் தொடர்பான ஒப்பந்த நகல், சொத்து தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வீட்டை புதுப்பிக்க கடன் வாங்க, உங்கள் வீட்டின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
PF கணக்கில் இருந்து திரும்பப் பெரும் தொகையின் அளவு: வீடு வாங்குவதற்கு உங்கள் மாத அடிப்படை சம்பளத்தின் 24 மடங்கு தொகை அல்லது கணக்கில் டெபாசிட் பண்ண மொத்த தொகை, இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த அளவிற்கு பணத்தை திரும்ப பெறலாம்.
வீட்டை பழுது பார்க்க அல்லது புதுப்பிக்க, மாத அடிப்படை சம்பளத்திலிருந்து 12 மடங்கு வரை திரும்ப பெறலாம். பொதுவாகவே PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இபிஎப் உறுப்பினராக நிறைவு செய்திருப்பது அவசியம்.
PF கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்ட பணத்திற்கு வட்டி கிடையாது என்பதால், கூடுதலாக கடன் வாங்குவது தவிர்க்கப்பட்டு உங்கள் கடன் சுமை குறையும். வங்கிக் கடன்களைப் போலன்றி, PF பணத்தை திரும்பப் பெற உத்தரவாதம் அல்லது பிணையம் தேவையில்லை.
PF கணக்கு இருப்பு அறிய: உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை, பதிவு செய்யப்பட்ட உங்கள் செல்போனிலிருந்தே 01122901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் மூலமும், உமாங் (UMANG) என்ற ஆப் மூலமும் உங்களது பிஎப் எவ்வளவு உள்ளது உள்ளிட்ட கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.