மக்களே கவனம்! அதிக வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? RBI முக்கிய அறிவிப்பு

RBI Circular To All Bank: செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை மூத்த மேற்பார்வை மேலாளருக்கு வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தல்.

Reserve Bank of India Latest News: அதிகமாக வங்கிக் கணக்கு வைத்துள்ள பொதுமக்களுக்கு ஆர்பிஐ சார்பில் திடீர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுக்குறித்து விவரங்களை பார்க்கலாம். 

1 /10

Bank Latest News: அதிகமாக வங்கிக் கணக்கு வைத்துள்ள பொதுமக்களுக்கு ஆர்பிஐ சார்பில் முக்கிய அறிவிப்பு. இதுக்குறித்து விவரங்களை பார்க்கலாம். 

2 /10

செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக விரைவான நடவடிக்கை எடுப்பதுடன், காலாண்டுக்கு ஒருமுறை அந்த கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்திருக்கிறது. 

3 /10

பொதுவாக இரண்டு வருடங்களுக்கு மேலாக சேமிப்பு அல்லது நடப்பு வங்கிக் கணக்கில் எந்தவித பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அவை செயலிந்ததாக கருதப்படும். ஏனென்றால் செயல்படாத வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பெரும்பாலான மோசடி சம்பவங்கள் அங்காங்கே நடைபெற்று வருகிறது. 

4 /10

எனவே ஒருவர் இரண்டு, மூன்று வங்கிக் கணக்குகளை வைத்திருந்தாலும் அவைகளை நீண்ட காலமாக முறையாக பராமரிக்கவில்லை என்றால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் வைத்திருக்கும் எல்லா வங்கிக் கணக்கையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்ச கணக்கையும் பராமரிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

5 /10

இப்படிப்பட்ட சூழலில் செயல்படாத வங்கிக் கணக்குகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி மேற்பார்வைத் துறை ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறது. இந்த ஆய்வில் வங்கிக் கணக்குகள் செயலற்று போவதற்கும், உரிமை கோறப்படாத டெபாசிட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும்  மற்றும் நீண்ட காலமாக பரிவர்த்தனை நடைபெறாமல் இருப்பது அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் KYC (நோ யுவர் கஸ்டமர்) தகவல்களை புதுப்பிக்காததை உட்பட பல்வேறு காரணங்கள் தெரிய வந்திருக்கிறது.

6 /10

இதனை அடுத்து அனைத்து வங்கிகளுக்கு சுற்றக்கை ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்திருக்கிறது. அந்த சுற்றறிக்கையில், சில வங்கிகளில் மொத்த டெபாசிட்டை விட செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை அதிகமாக உள்ளது எனவே வங்கிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக செயல்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதுடன் அவற்றை செயல்படும் கணக்காக மாற்ற எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். 

7 /10

மேலும் கேஒய்சி (KYC) வாயிலாக தடையற்ற முறையில் புதுப்பிக்க மொபைல் அல்லது இணைய வங்கி, பிற வங்கிக் கிளை மற்றும் வீடியோ வாயிலாக வாடிக்கையாளரை அடையாளம் காண்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுதப்பட்டு உள்ளது. 

8 /10

அரசால் வழங்கப்படும் நலத்திட்ட பயனாளிகள் வங்கிக் கணக்குகள் தகவல்களை புதுப்பிக்கவில்லை எனக் கூறி முடக்கப்படுவதை காண முடிகிறது. இதுபோன்ற வங்கிக் கணக்கை தனியாக பிரித்து, அவர்களுக்கு அரசு திட்டங்களின் நிதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 

9 /10

செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மறுபடியும் பயன்படுத்த, சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அத்துடன் காலாண்டுக்கு ஒருமுறை செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை மூத்த மேற்பார்வை மேலாளருக்கு வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 

10 /10

எனவே நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், உடனே அந்த வங்கிக் கணக்குகள் KYC புதுப்பித்து பராமரித்துக் கொள்ளுங்கள்.