Belly Fat: அடம்பிடிக்கும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் வெள்ளரி: இப்படி சாப்பிடுங்க போதும்

Belly Fat Reduction With Cucumber: உடல் பருமன் என்பது உலகில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல என்ன செய்தால் எடையை குறைக்கலாம் என்ற சிந்தனையிலேயே பலர் உள்ளனர்.

Belly Fat Reduction With Cucumber: நம் உடல் எடையை குறைக்க நாம் எடுக்கும் முயற்சிகளால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படக்கூடாது என்பதில் அதிகப்படியான கவனம் இருக்க வேண்டும். சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தொப்பை கொழுப்பு (Belly Fat) பிரச்சனையும் இந்நாட்களில் மிக அதிகமாக உள்ளது. நாம் தினசரிஉணவு வகைகளைக் கொண்டே தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் குறைக்கலாம் (Weight Loss). அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

நம்மில் பலர் வெள்ளரிக்காயை (Cucumber) டயட்டில் பயன்படுத்துகிறோம். இதை சாலட், பச்சடி, சாறு என பல வகைகளில் உட்கொள்கிறோம். இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கின்றது. இதில் பல வகையான ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.

2 /8

வெள்ளரிக்காய் உட்கொள்வதால் தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பெரிய அளவில் உதவி கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, கலீரிகளும் மிக குறைவாக உள்ளன. ஆகையால் இது உடல் எடையை குறைப்பதில் அதிகமாக உதவுகின்றது. உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காயை எப்படி உட்கொள்வது என இந்த பதிவில் காணலாம்

3 /8

வெள்ளரிக்காயை தோல் சீவி தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து பிரட்டி உப்பு, மிளகு பொடி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த சாலட் சுவையானதாக இருப்பதோடு எடையை குறைக்கவும் உதவுகின்றது.

4 /8

வெள்ளரிக்காயை தோல் சீவி நன்றாக துருவிக் கொள்ளவும். அதன் பின்னர் தயிரில் இதைக் கலந்து உப்பு, சீரகப்பொடி, மிளகுப்பொடி, தனியா பொடி ஆகியவை சேர்த்து கடுகு, சீரகம் தாளிக்கவும். இது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செரிமானத்தையும் சீராக்கும்

5 /8

வெள்ளரிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி அதை தயிரில் டிப் செய்து மாலை வேலை ஸ்னாக்சாக சாப்பிடலாம். இதை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. வயிறும் நிறைவான உணர்வுடன் இருக்கும்

6 /8

வெள்ளரிக்காயை தோல் சீவி நறுக்கி அதனுடன் வாழைப்பழம், கீரை, தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவைப்பட்டால் சிறிது தேங்காயும் சேர்க்கலாம். இந்த ஸ்மூத்தி உடலில் தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.

7 /8

டிடாக்ஸ் தண்ணீர் தயாரிக்க வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு, அதில் புதினா, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சேர்க்கவும். இதை  சிறிது நேரத்திற்கு பிரிட்ஜில் வைத்து பின்னர் குடிக்கலாம். அனைத்து பொருட்களின் சாறும் அந்த நீரில் இறங்குவதால் இந்த டிடாக்ஸ் தண்ணீர் நீர்ச்சத்தை அளிப்பதோடு வள₹சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

8 /8

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.