கைமீறி வரும் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி? 8 வழிகள்!

Easy Ways To Control Anger : நம்மில் பலருக்கு அதிகமாக கோபம் வரும். இப்படி கையை மீறி வரும் கோபத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் தெரியுமா?

Easy Ways To Control Anger : மகிழ்ச்சி, சோகம், அழுகை போல கோபமும் ஒரு உணர்வுதான்.  “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..” என பலர் சொல்லி கேட்டிருப்போம். இதற்கு அர்த்தம், ஒருவன் மிகவும் கோபத்தில் இருக்கும் போது, அவன் என்ன செய்கிறான் என்பது, அவனுக்கே தெரியாது. இதனால், நமது உணர்ச்சிகள் மிகுதியாக இருக்கும் போது நாம் எந்த முடிவையும் எடுக்க கூடாது. எனவே, நம் கையை மீறி வரும் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இதோ, அதற்கான டிப்ஸ். 

1 /8

மூச்சு பயிற்சி: அதிகமாக கோபம் வரும் சமயத்தில், முதலில் நாம் மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, நமது உடல் சாதாரனமாக ரிலாக்ஸ் ஆகிவிடும், சில நிமிடங்களுக்கு மூக்கினால் மூச்சை இழுத்து விட்டு, பின்பு அதை கொஞ்ச நேரம் ஹோல்ட் செய்து வாயினால் வெளியில் விட வேண்டும். 

2 /8

10 வரை எண்ணுங்கள்: உங்களுக்குள் நீங்களே 1-10 வரை எண்ணிக்கொள்ளுங்கள். அப்படி எண்ணும் போது அதற்கு இடையே ஓரிரண்டு விநாடி கேப் விட வேண்டும். இப்படி செய்தால், அதிகமாக இருக்கும் உங்கள் உணர்சிகள் கொஞ்சம் அடங்கும். 

3 /8

ரிலாக்ஸ் ஆக வழிகள்: கோபம் வரும் சமயங்களில் நீங்கள் உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்ய, உங்களை அமைதி படுத்தும் விஷயங்கள் குறித்து எண்ணிப்பார்க்க வேண்டும். 

4 /8

தள்ளி இருங்கள்: உங்களை குறிப்பிட்ட ஒரு நபர், அல்லது குறிப்பிட்ட ஒரு இடம் கோபப்பட வைக்கிறது என்றால், அதனிடம் இருந்து முடிந்தவரை தள்ளி இருப்பது மிகவும் நல்லதாகும். இதனால், நீங்கள் உங்கள் மனதையும், உங்களையும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். 

5 /8

நிகழ்காலத்தில் இருங்கள்: கோபம் வரும் போது, உங்களை சுற்றி நடக்கும் சில விஷயங்களை அப்படியே கவனித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த நிறம் எங்கேனும் இருக்கிறதா? ஏதேனும் ஒரு பொருள் உங்கள் கவனத்தை ஈர்க்கிறதா? என்பதை சுற்றி பாருங்கள். 

6 /8

நிதானம்: கோபம் கொள்கையில் நிதானத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் ஆகும். கோபப்படுத்திய நபரிடம் சென்று பேசும் போது உங்களது பங்கு நியாத்தை பேசுகையில் பொறுமையுடன் இருக்க வேண்டும். 

7 /8

உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தை குறைக்கவும், உங்கள் மன நிலையை மேம்படுத்தவும் உதவும். ஜாக்கிங், யோகா செய்வது, வேகமாக நடப்பது போன்ற பயிற்சிகள் நன்றாகவே உதவும்.

8 /8

குற்றம் சாட்டாமல் தீர்வுகளை தேடுவது: உங்கள் கோபத்திற்கு காரணம் யார்? அவர்கள் செய்தது நியாயமா? என்றெல்லாம் நினைப்பதை விட்டுவிட்டு, இனி இந்த சூழலை எப்படி கையாள்வது என்பதை தெரிந்து கொண்டு அந்த பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளுங்கள்.