பாரத பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 லட்சம் ரூபாய் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது
PMEGP loan Tamil | மத்திய அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்துக்காக அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் தொழில் கடன் வழங்கப்படுகிறது. எப்படி பெறுவது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.
இந்த திட்டத்தை சுருக்கம் PMEGP LOAN ஆகும். மாற்றுத் திறனாளிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இந்த லோன் வேண்டும் என விரும்புவர்கள் இணையதளத்தின் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
PMEGP LOAN பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள், இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம்.
பாரத பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் லோன் பெற விரும்புவர்களுக்கான தகுதி என்னவென்றால், வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்? PMEGP LOAN விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்ட பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ரூ.25,000 முதல் ரூ.25,00,000 வரை லோன் வழங்குமாறு தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு அரசு பரிந்துரைக்கும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கிராமபுற மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படும்.
ஆனால், நீங்கள் செய்யப்போகும் தொழில் குறித்த தெளிவான விளக்கம், ஆகும் செலவு, முதலீடு, லாபம் குறித்த தகவல்கள் எல்லாம் இருக்க வேண்டும். மாத வருவாய் உள்ளிட்ட தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, உங்களின் தொழில் திட்ட பலனை பொறுத்து லோன் கொடுக்க ஏற்பாடு செய்வார்கள்.