உங்கள் மீது பிறருக்கு மரியாதை உயர..‘இந்த’ 7 விஷயங்களை செய்யுங்கள்!

Habits To Make People Respect You : பிறர், உங்களை மதிக்க வேண்டும் என்றால், நீங்களும் சில தினசரி பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டி இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? 

Habits To Make People Respect You : ஒரு சிலருக்கு, எங்கு சென்றாலும் அவர்களுக்கு கேட்காமலேயே மரியாதை கிடைக்கும். இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? அவர்களின் தினசரி பழக்க வழக்கங்கள்தான். அது போல உங்களுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்கு நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் எல்லாம் ஒரு சில மட்டும்தான். அவை என்னென்ன தெரியுமா?

1 /8

உங்களுக்கு ஒரு விஷயம், பிறரிடம் இருந்து வேண்டும் என்று நினைக்கும் போது அதை முதலில் உங்களிடம் நீங்களே கொடுத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எனவே, பிறர் உங்களை  மதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதற்கு முன்னர் அந்த மரியாதையை உங்களுக்கு நீங்களே முதலில் நிறைய கொடுத்துக்கொள்ளுங்கள்

2 /8

மனிதர்களுக்கு, தனக்கு வாக்கு கொடுத்து அதை தவறாமல் இருப்பவர்களை மிகவும் பிடிக்கும். எனவே, உங்களால் முடியாத வாக்கை கொடுக்கமால், சொல்லியதை செய்து முடியுங்கள். உங்களிடம் நம்பி ஒரு விஷயத்தை கூறினால் அது பிரச்சனையாக மாறாது என்று அவர்களுக்கு தெரிந்து விட்டாலே நீங்கள் அவர்களின் மரியாதையை பெற்ற நபராக மாறிவிடுவீர்கள்.

3 /8

நீங்கள் எதை முதலில் கொடுக்கிறீர்களோ பின்னாளில் அதையே அருவடையும் செய்வீர்கள். எனவே, அனைவரிடமும் சரிசமமாக மரியாதை கொடுத்து பழகுங்கள்.

4 /8

எப்போதும் பேசிக்கொண்டே இருப்பது உங்கள் மனதில் இருப்பவற்றை வேண்டுமானால் வெளியில் கொட்ட உதவலாம். ஆனால், உங்களுடன் பேசுபவர்களுக்கும் தன் வார்த்தைகள் கேட்கப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே, ஒரு சிலர் நேரங்களில் பிறரை காது கொடுத்து கேட்பதில் தவறில்லை. 

5 /8

தனக்கு கோட்பாடுகள் விதித்து, ஒரு வரைமுறையுடன் வாழ்பவர்கள் எப்போதும் பிறரது மதிப்பை பெறுபவர்களாக இருப்பர். இது போன்ற நபர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருப்பதால் இந்த மரியாதை அவர்களுக்கு பிறரிடம் இருந்து கிடைக்கிறது. 

6 /8

பிறரை புரிந்து கொள்ளூம் திறன் இருப்பது மிகவும் அரிதான குணமாகும். தனக்கு இருப்பது போல, பிறருக்கும் உணர்வு இருக்கிறது, அதை மதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகமே அடிமை. எனவே, பிறரை புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். 

7 /8

தெளிவாக பேசுவது, தெளிவான எண்ண ஓட்டத்தை வெளி காண்பிக்கும். எனவே, எந்த விஷயத்தை-எந்த மொழியில் பேசினாலும் அதை தெளிவாக பேச கற்றுக்கொள்ளுங்கள். 

8 /8

மரியாதை மிகுந்த நபர்களுக்கும் உள்ளுக்குள் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். எனவே, அது குறித்து யாரேனும் பேசினால் அல்லது உங்களை நோக்கி வரும் விமர்சனங்களை எஏற்றுக்கொள்ளவும் நிங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.