மக்களே முந்துங்கள்... இன்னும் 2 நாள்களில் ஆப்பர் முடியுது - டாப் மொபைல்கள் தள்ளுபடியில்!

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அது இரண்டு தினங்களில் நிறைவடைய உள்ளது. அதில் கிடைக்கும் டாப் 5 மொபைல்களை இங்கு காணலாம்.
  • Dec 14, 2023, 17:58 PM IST

Flipkart Year End Sale 2023: பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அது இரண்டு தினங்களில் நிறைவடைய உள்ளது. அதில் கிடைக்கும் டாப் 5 மொபைல்களை இங்கு காணலாம்.

 

 

 

1 /7

ஹெச்டிஎப்சி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட் வங்கிகளின் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2023இன் போது, தங்கள் ஸ்மார்ட்போன் வாங்கும் போது 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை அனுபவிக்க முடியும்.   

2 /7

இந்த தள்ளுபடி விற்பனையானது டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் பல சலுகைகளை வழங்குகிறது. மேலும் இது டிசம்பர் 16ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமையன்று முடிவடையும். இதில் கிடைக்கும் 5 மொபைல்களை இங்கு காணலாம்.  

3 /7

iPhone 14: இதன் அசல் விலை ரூ.69 ஆயிரத்து 900, ஐபோன் 14 விற்பனையின் போது ரூ.58 ஆயிரத்து 999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 500 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பழைய கைபேசிகளுக்கு 34 ஆயிரம் 500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.

4 /7

Samsung Galaxy Z Fold5: 1 ஆயிரத்து 54 லட்சத்து 999 ரூபாய் அசல் விலையுடன், Samsung Galaxy Z Fold5 இப்போது ரூ. 7 ஆயிரம் அமேசான் கூப்பனைப் பயன்படுத்திய பிறகு 1 லட்சத்து 48 ஆயிரத்து 999 ரூபாயில் கிடைக்கிறது. 44 ஆயிரத்து 500 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.  

5 /7

Google Pixel 7A: கூகுள் பிக்சல் 7A அசல் விலை ரூ. 43 ஆயிரத்து 999 ஆகும். இந்த விற்பனையின் போது 37 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பஞ்சபாப் நேஷ்னல் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாய் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.  

6 /7

Redmi 12: ரெட்மியின் அசல் விலை ரூ.10 ஆயிரத்து 999 ஆகும். இது பிளிப்கார்ட் விற்பனையின் போது தள்ளுபடி விலை 9 ஆயிரத்து 899 ரூபாயில் கிடைக்கும்.

7 /7

Motorola Edge 40: இந்த மொபைல் 29 ஆயிரத்து 999 ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டது.  பஞ்சாப் நேஷ்னல் வங்கி கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடி உட்பட, விற்பனையின் போது ரூ.25,499க்கு உங்களுடையதாக இருக்கும்.