ஏடிஎம் கார்டு தொலைந்து போய்விட்டதா... புதுசு வாங்க எவ்வளவு கட்டணம் ஆகும் தெரியுமா?

Charges For ATM Card Replacement: ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டது என புதிய கார்டு வாங்கச் சென்றால், இந்த 5 முக்கிய வங்கிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிப்பார்கள் என்பது குறித்து இதில் காணலாம். 

  • May 27, 2024, 20:59 PM IST

ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் வங்கியிலோ அல்லது ஆன்லைன் மூலமாக அதனை விண்ணப்பித்து பெறலாம். 

 

1 /8

ஏடிஎம் கார்டை எங்காவது தொலைத்துவிடுவது இயல்பானதுதான். இது பலருக்கும் அடிக்கடி நடக்கும். சில சமயங்களில் தேடினால் கொஞ்ச நாள் கழித்துக் கூட கிடைத்துவிடும். சில நேரங்களில் கிடைக்கவே கிடைக்காது.  

2 /8

அப்படி உங்களின் ஏடிஎம் கார்டும் எங்கோ தொலைந்துவிட்டு கிடைக்கவே கிடைக்கவில்லை என்றால் அதனை உடனடியாக உங்களின் வங்கிக்கு தெரிவித்து அதன் செயல்பாட்டை முடக்கிவிடுங்கள். இதனால் யாரும் அதனை தவறாக பயன்படுத்த இயலாது.   

3 /8

தொடர்ந்து, புதிய ஏடிஎம் கார்டு வேண்டுமென்றால் வங்கியில் நேரிலோ, ஆன்லைனிலோ விண்ணப்பித்து அதனை பெறலாம். அந்த வகையில், புதிய ஏடிஎம் கார்டுகளை வாங்க இந்த 5 முக்கிய வங்கிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து இங்கு காணலாம்.   

4 /8

பஞ்சாப் நேஷ்னல் வங்கி (Punjab Nationl Bank): உங்கள் கணக்கு இந்த வங்கியில் இருந்து உங்கள் கார்டு தொலைந்துவிட்டால் புதிய கார்டு வாங்க ரூ.150 முதல் ரூ.500 வரை ஆகும். அது நீங்கள் பெறும் டெபிட் கார்டை பொறுத்தது. மேலும் இதில் கூடுதலாக 18% ஜிஎஸ்டியும் பிடித்தம் செய்யப்படும்.   

5 /8

கனரா வங்கி (Canara Bank): இந்த வங்கியில் கணக்கு இருந்து உங்களின் டெபிட் கார்டு தொலைந்துவிட்டால், புதிய கார்ட் வாங்க ரூ.150 ஆகும். கூடுதலாக 18% ஜிஎஸ்டியும் பிடித்தம் செய்யப்படும்.   

6 /8

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank): இந்த வங்கியில் உங்களின் தொலைந்துபோன டெபிட் கார்டுக்கான புதிய கார்டை பெற ரூ.200 செலவாகும். இதற்கு 18% ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.   

7 /8

ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank): இந்த வங்கியில் தொலைந்துபோன ஏடிஎம் கார்டுக்கு பதிலாக புதிய கார்ட் வாங்க 200 ரூபாய் மற்றும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.   

8 /8

பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India): இந்த வங்கியில் தொலைந்துபோன ஏடிஎம் கார்டை வாங்க ரூ.300 மற்றும் 18% செலுத்த வேண்டும்.