கிரகங்களின் வக்ர நிவர்த்தி: அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் இயக்கங்களை மாற்றும். ஜோதிடத்தில், கோள்களின் அஸ்தமனம் மற்றும் வக்ர நிவர்த்திக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சனி வக்ர நிவர்த்தி: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
ராசிகளில் தாக்கம்: ஆண்டின் இறுதியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு சனியின் இந்த நிலையால் பல அற்புதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: சனியின் வக்ர நிவர்த்தி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். இக்காலகட்டத்தில் இவர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இதனுடன் அனைத்துத் துறைகளிலும் பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இதனுடன், மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி ஆகியவை வாழ்க்கையில் இருக்கும். மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்கு சனியின் வக்ர நிவர்த்தி சுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதனுடன் உழைப்பின் முழுப் பலனையும் பெறுவார்கள்.பெற்றோரை கவனிப்பது நன்மையை தரும். இவர்களுக்கு தந்தை வழியில் பண பலன்கள் கிடைக்கும்.
துலாம்: சனி வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கலாம். இவர்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். ஆர்டர்கள் அதிகரிக்கும். இத்துடன் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். சிலருக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். உடல்நிலை சீராக இருக்கும்.
தனுசு: வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மாணவர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.