லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்? அவரே சொன்ன அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு 'லியோ' படத்தின் படப்பிடிப்பை முடித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

1 /5

ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லோகேஷிடம் மாணவர்கள் லியோ மற்றும் கைதி 2 படம் பற்றிய தங்கள் கேள்விகளால் அவரை திகைக்க வைத்தனர்.  

2 /5

மறுபுறம், 'தலைவர் 171' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. 'லியோ' படத்திற்குப் பிறகு, 'கைதி 2'க்கு முன், இந்த திட்டம் அவரது அடுத்த முயற்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.   

3 /5

இந்த தகவலை லோகேஷ் உறுதிப்படுத்தினார். கைதி 2 எப்போது தொடங்கும் என்று ஒரு ரசிகர் கேட்டார், அதற்கு லோகி, "நான் அடுத்த படம் ஒன்று இயக்க உள்ளேன். அதன் பிறகு கைதி 2 தொடங்கும்" என்று பதிலளித்தார்.  

4 /5

லோகேஷ் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்கப் போகிறீர்களா என்று ஒருவர் கேட்டதற்கு, "தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு வரும். அதை இப்போது வெளியிட முடியாது" என்று பதிலளித்தார்.   

5 /5

'லியோ' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன் லோகேஷ் கனகராஜ் சொன்ன அதே பதில்தான் இப்போதும் கூறி உள்ளார். ரஜினியுடன் லோகேஷ் இணையும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.