இந்த ஆண்டு 3 ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்: மகாலட்சுமியின் அருளால் செல்வம் பெருகும்

New Year Horoscope Predictions: 2023 புத்தாண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என்று தெரிந்துகொள்ளும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அனைவரிடமும் உள்ளது. வாட்டி வதைத்த துன்பங்கள் நீங்குமா, புதிய பிரச்சனைகள் பிறக்குமா, எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா, உறவுகளின் ஆதரவு கிடைக்குமா என பலரது மனங்களிலும் பல கேள்விகள் உள்ளன. திருமணம், தொழில், ஆரோக்கியம், வேலை ஆகியவற்றில் ஆண்டு எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை பெற அனைவரும் காத்திருக்கிறார்கள். 

1 /5

புத்தாண்டில் பல கிரகங்களில் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் நிகழவுள்ளன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். 

2 /5

வேத ஜோதிட கணக்கீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில், சனி, குரு மற்றும் ராகு-கேது போன்ற பெரிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் காணப்படும். ஆண்டின் துவக்கத்தில், சனி பகவான் மகர ராசியில் இருந்து விலகி இரண்டரை வருடங்கள் கழித்து கும்ப ராசியில் பிரவேசிப்பார். 

3 /5

ஜோதிட சாஸ்திரப்படி, 2023-ம் ஆண்டு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது பொழியும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு நில பேரத்தில் லாபம் அதிகம் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இந்த ஆண்டு பல வாய்ப்புகள் கிடைக்கும். 

4 /5

2023ல் சனியின் சிறப்பு அருள் உங்களுக்கு கிடைக்கும். இதனால் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டு மிகவும் மங்களகரமான ஆண்டாக இருக்கும். 

5 /5

2023-ம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது.  மிதுன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். மொத்தத்தில், குரு மற்றும் சனியின் சிறப்பு ஆசிகள் ஆண்டு முழுவதும் உங்களுக்கு இருக்கும்.