ஜோதிடத்தைப் பொறுத்தவரை டிசம்பர் மாதத்தின் கடைசி நாட்கள் மிகவும் முக்கியமானவை. புதன் 28 டிசம்பர் 2022 அன்று பெயர்ச்சி ஆகப் போகிறது. புதன் கிரகம் சஞ்சாரம் செய்வதன் மூலம் சனியின் ராசியான மகர ராசிக்குள் நுழையும். இதற்குப் பிறகு, புதன் டிசம்பர் 31-ம் தேதி வக்ர நிலையில் மாறும். புதனின் நிலையில் ஏற்படும் இந்த 2 மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவர்கள் செல்வச் செழிப்பையும் வெற்றியையும் பெறுவார்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பெரும் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் வேகமெடுக்கும். உங்கள் முடிவுகளும் பணிகளும் பாராட்டப்படும். சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணி மாறுதல் முயற்சி வெற்றி பெறும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றத்தால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலையில் சேரலாம். வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு வரலாம். வியாபாரத்தில் பெரிய வெற்றியை அடைய முடியும். தனியாக இருப்பவர்கள் துணையை பெறலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்தும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசுத் துறையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயம் அடைவார்கள். கூட்டாக வேலை செய்பவர்கள் கவனமாக வேலை செய்ய வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். முக்கியமான வேலை ஆரம்பிக்கலாம். ஒப்பந்தம் மூலம் பலத்த ஆதாயம் இருக்கலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்கள் வெற்றி பெறுவார்கள். தேர்வு-நேர்காணல் ஆகியவற்றில் வெற்றிகள் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் எதிர்பாராத பலன்களைத் தரும். வருமான வழிகள் அதிகரிக்கும். கடனில் சிக்கியுள்ள பணம் கிடைக்கும். சொத்துக்களால் லாபம் வரலாம். புதிய வீடு அல்லது மனை வாங்கலாம். பேச்சு சக்தியில் வேலை நடக்கும். மாணவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். புதிய தொழில் தொடங்க இது ஒரு நல்ல நேரம். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)