குரு பெயர்ச்சி பலன்கள்... ‘இந்த’ ராசிகள் பார்த்து கொஞ்சம் சூதானமாக இருங்க..!!

Guru Peyarchi Palangal: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், மே மாதம் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ள நிலையில், சில ராசிகளின் வாழ்க்கையில்,  பின்னடைவு ஏற்படலாம்.  குறிப்பிட்ட்ட சில ராசிகள் தொழில், கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை காணலாம்.

1 /7

குரு பெயர்ச்சி: குரு பகவான் மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 1:50 மணிக்கு ரிஷப ராசிக்குள் சஞ்சரித்துள்ள நிலையில், 2025 மே 14, 2025 இரவு 11:20 மணி வரை ரிஷப ராசியில் இருப்பார். அதன் பிறகு மிதுன ராசிககு பெயர்ச்சியாவார். மே மாத குரு பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குரு பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பை சந்திக்கும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /7

கடகம்: குரு பெயர்ச்சி உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.  எனவே, அவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதே நேரத்தில், குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரலாம், இருப்பினும் இந்த மாற்றத்தை நீங்களே கவனமாக யோசித்து தவிர்ப்பது நல்லது. பொறுமையுடன் செயல்பட்டால்  பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

3 /7

கன்னி: குரு பெயர்ச்சி காரணமாக, நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். இன்று முதல் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம், இது உங்கள் சேமிப்பை பாதிக்கும். உங்கள் ஆரோக்கியம் மோசமடையக்கூடும் என்பதால் உங்கள் உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தின் தேவைகளுக்கும் ஊதாரித்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொண்டு, வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.

4 /7

விருச்சிகம்: குரு பெயர்ச்சி தங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் வயிறு தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் வரலாம். கவனக்குறைவாக இருப்பது நல்லதல்ல. இந்த காலகட்டத்தில், உங்கள் வருமானம் குறையும் மற்றும் செலவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம்.  

5 /7

மகரம்: குரு பெயர்ச்சி உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கப் போகிறது. வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையை பராமரிப்பதில் சிரமம் இருக்கலாம். இது வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.

6 /7

கும்பம்: ரிஷப ராசி குரு பெயர்ச்சியின் கலவையான பலன்களை பெறலாம். வருமானம் பெரிதாக ஒன்றும் வருவதாக தெரியவில்லை. வருமானம் சாதாரணமாக இருக்கலாம். இந்த நேரத்தில், நீங்கள் சில உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் மன வருத்தம் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.