IND vs SL: இந்தியா - இலங்கை டி20 போட்டி... எத்தனை மணிக்கு தொடங்கும்...? எந்த சேனலில் பார்ப்பது?

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரை எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இங்கு காணலாம். 

  • Jul 26, 2024, 17:44 PM IST

இந்தியா - இலங்கை என இரு அணிகளுமே டி20 அரங்கில் தற்போது புதிய கேப்டன்ஸி, புதிய தலைமை பயிற்சியாளர் என சிற்சில மாற்றங்களை சந்தித்துள்ளன.

 

1 /8

இந்திய அணி இப்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரு அணிகள் மோதுகின்றன.   

2 /8

இதில் டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளில் மீதம் உள்ள இரண்டு டி20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.  

3 /8

டி20 போட்டிகள் அனைத்தும் பல்லேகலே நகரிலும், ஓடிஐ போட்டிகள் அனைத்தும் கொழும்பு நகரிலும் நடைபெறுகின்றன. மூன்று ஓடிஐ போட்டிகளும் ஆக. 2, 4, 7 ஆகிய தேதிகள் நடைபெறுகின்றன.   

4 /8

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் புதிதாக நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் சுற்றுப்பயணம் ஆகும். சூர்யகுமார் கேப்டனாகவும், சுப்மான் கில் துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர்.   

5 /8

இலங்கை அணியில் தற்போது இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெய்சூர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார். கேப்டன்ஸியில் இருந்து ஹசரங்கா விலகிய நிலையில், சரியத் அசலங்கா கேப்டனாக தேர்வாகி உள்ளார். அந்த வகையில், முதல் டி20 போட்டிக்கு இரு அணிகளின் பிளேயிங் லெவன்களை இங்கு காணலாம்.    

6 /8

இந்திய பிளெயிங் லெவன் (கணிப்பு): சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ்  

7 /8

இலங்கை பிளேயிங் லெவன் (கணிப்பு): அவிஷ்கா ஃபெர்னான்டோ, சரியத் அசலங்கா, பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமல், வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா, மதீஷா பதிரானா, மகேஷ் தீக்ஷனா, துனித் வெல்லாலகே, பினுரா ஃபெர்னான்டோ  

8 /8

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த தொடரை நீங்கள் தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம். ஓடிடி என்றால் சோனி லிவ் (SonyLiv) தளத்தில் சந்தாவுடன் பார்க்கலாம்.