தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்பு அவர் கூறி இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

1 /6

சூர்யகுமார் யாதவை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்து இருந்தார். மேலும் 2023 ஒருநாள் உலக கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சூர்யகுமார் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

2 /6

2023 ஒருநாள் உலக கோப்பையில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான் விளையாட வேண்டும் என்று கவுதம் கம்பீர் விரும்பினார்.

3 /6

விராட் கோலி அவரது மைல்கற்களுக்காக விளையாடுகிறார் என்றும், ரோஹித் சர்மா அணிக்காக விளையாடுகிறார் என்று கம்பீர் முன்பு தெரிவித்து இருந்தார். இது தவிர 2022 டி20 உலகக்கோப்பையின் போது சூர்யகுமார் 3வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும் இறங்கி வேண்டும் என்று கம்பீர் கூறி இருந்தார்.

4 /6

2019 உலகக் கோப்பையில் இந்தியாவின் நம்பர்.4 பேட்டராக சேதேஷ்வர் புஜாராவை எடுக்க வேண்டும் என கவுதம் கம்பீர் விரும்பினார். மேலும் 2019 உலகக் கோப்பையில் அஷ்வின் 4 இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

5 /6

ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் ஒரு நாள் போட்டிக்கான வீரர் இல்லை என்றும், உலகக் கோப்பை அணியில் அவர் நீக்கப்பட வேண்டும் என்று கம்பீர் விரும்பினார். ஆனால் பாட் கம்மின்ஸ் தலைமையில் உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.  

6 /6

ஐபிஎல் 2024ல் கொல்கத்தா அணி கோப்பையை எல்லா கம்பீர் தான் காரணம் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். உண்மையில் அவர் வெறும் ஆலோசகர் தான் என்றும், சந்திரகாந்த் பண்டிட் தான் கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.