இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை வீரர்கள் (ITBP) சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தினத்தை லடாக்கில் 16,000 அடி உயரத்தில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் கொண்டாடினர்.
பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் முழு உற்சாகத்துடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர் ITBP வீரர்கள். சிகரத்தில் சுதந்திரத்தின் சந்தோஷ பிரதிபலிப்பு.
சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ITBP படையினர் மூவர்ணக் கொடிகளை எடுத்துச் சென்றனர்.
சுமார் 90,000 படை வீரர்களைக் கொண்ட ITBP-யின் முதன்மைப் பணி 3,488 கி.மீ நீளமுள்ள LAC-ஐ பாதுகப்பதாகும். இந்த எல்லைப் பகுதி லடாக்கில் உள்ள காரகோரம் பாஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தின் ஜாச்செப் லா வரை விரிந்து பரந்து இருக்கும் ஒரு எல்லைப் பகுதியாகும்.
ஜூலை 5 ஆம் தேதி திறக்கப்பட்ட டெல்லியின் சத்தர்பூரில் உள்ள ராதா சோமி பியாஸில் நாட்டின் மிகப்பெரிய மருத்துவ வசதி மையமான 10,000 படுக்கைகள் கொண்ட COVID-19 சர்தார் படேல் மருத்துவமனையை ITBP வீரர்கள் இயக்கி வருகிறார்கள்.
தங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்றும் முனைப்புடன் இருக்கும் ITBP வீரர்கள் யோகா தினத்தன்று யோகா பயிற்சியில்!!