7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் காட்டில் மழை.. டிஏ வடிவில் வரும் வரம்

7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருந்தால், இப்போது உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.


இன்னும் சில நாட்களில் அகவிலைப்படி அதிகரிப்புக்கான மிகப்பெரிய ஜாக்பாட் செய்தி ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குப் பிறகு மத்திய ஊழியர்களின் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். இந்த முறை அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்கப் போகிறது, அதன் தரவுகளும் ஜூலை 31 ஆம் தேதி வரும். அதன் பிறகு ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். 

1 /8

ஏஐசிபிஐ குறியீட்டின்படி, டிஏவில் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்பது இதுவரை வெளியிடப்பட்ட எண்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. தற்போது, ​​ஊழியர்களின் சம்பளம் மாதம் எவ்வளவு உயரும் என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரியவரும்.

2 /8

அடுத்த திருத்தம்: தற்போது, ​​ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போது, இதில் அடுத்த திருத்தம் ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும். 

3 /8

அறிவிப்பு எப்போது? ம்முறை அரசாங்கம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பை வெளியிடும். 

4 /8

அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும்: இதுவரை வந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த முறையும் மோடி அரசு மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தக்கூடும். இதுவரை வந்துள்ள இந்த அரையாண்டுக்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும்.   

5 /8

பணவீக்க விகிதம்: பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. மத்திய அரசுடன், மாநில அரசுகளும் அகவிலைப்படியை அவ்வப்போது உயர்த்துகின்றன. பணவீக்கம் அதிகமாகும் போது, டிஏ அதிகரிப்பு அதிகமாகும். 

6 /8

தொழிலாளர் பணியகம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை கணக்கிடுகிறது. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

7 /8

தற்போது ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில், அவருக்கு 42 சதவீதம் என்ற அடிப்படையில் அகவிலைப்படி ரூ.7560 கிடைக்கும். 

8 /8

அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்தால், அகவிலைப்படி மாதம் ரூ.8280 ஆக உயரும். அதன்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.720 அதிகரிக்கும்.