’தென்னிந்தியாவில் ஜொலிக்க வரும் பாலிவுட் இளம் புயல்’ ஜான்வி கபூரின் அடுத்த ஜோடி இவர் தான்

ஜான்வி கபூர் அடுத்ததாக நாகர்ஜூனாவின் இளைய மகன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்

1 /5

நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் நடிகர் அகில் அக்கினேனி. இவர் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஏஜென்ட் .   

2 /5

பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை தந்தது.   

3 /5

இந்த நிலையில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் அகில். புதுமுக இயக்குனர் அனில் குமார் இயக்கிறார்.  

4 /5

இந்த படத்திற்கு 'தீரா' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார்.   

5 /5

இப்படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது