Kajal Aggarwal: தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால், பளிங்கு போன்ற தேகத்திற்கு சில சீக்ரெட்ஸ்களை கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்தவர், காஜல் அகர்வால். இவருக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார். இவரின் சருமம், பளபளவென இருக்கும். இதை எப்படி பராமரிப்பது என சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.
தென்னிந்தாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், காஜல் அகர்வால். இவர், இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நடிகைகள் மட்டுமன்றி, பொதுவாக அனைவருமே தங்களது சரும அழகினை பாதுகாப்பது முக்கியம். அந்த வகையில், தன் சரும பாதுகாப்பிற்கான சீக்ரெட்டை காஜல் பகிர்ந்துள்ளார். அவை என்ன தெரியுமா?
காஜல், பாதாமினால் உருவாக்கிய இயற்கை ஸ்க்ரப்பை உபயோகிக்கிறாராம். இதை செய்ய, உரிக்காமல் அறைத்து தினமும் முகத்தில் தேய்க்க வேண்டுமாம். இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் இறந்து போன செல்கள் மடிந்து விடுமாம்.
சருமத்தை டோனிங், மாய்ஸ்ட்ரைசிங் மற்றும் க்ளென்ஸ் செய்ய காஜல் தவறுவதே இல்லையாம். வெளியில் செல்வதற்கு முன்னர் சன்ஸ்க்ரீன் லோஷன் தடவ தவறக்கூடாது என்கிறார் காஜல்.
தேங்காய் மற்றும் முல்தானி மட்டியால் செய்த இயற்கை ஃபேஸ் பேக்கை உபயோகிக்கிறார் காஜல். இதை, வாரத்தில் ஒரு முறை செய்கிறாராம். இதனால், இவரது முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கிறது.
தினசரி உடற்பயிற்சி காஜல் அகர்வாலின் அன்றாட to-do லிஸ்டில் ஒன்று. தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் நம் சருமம் இயற்கை பொலிவை பெறும் என்கிறார் காஜல். இதனால் உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும். ஆரோக்கியத்தை பேணலாம்.
இரவில் தூங்க செல்வதற்கு முன்னர், காஜல் தனது மேக்-அப்பை நீக்க தவறுவதில்லை. தேங்காய் எண்ணெய் அல்லது வெட் டிஷூ கொண்டு மேக்-அப்பை தூங்க செல்வதற்கு முன்பு நீக்க வேண்டும். மேக்-அப்பை நீக்காமல் உறங்க செல்வதால், நம் முகத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.