சிஎஸ்கே தூக்கப்போகும் இளம் வீரர் யார்? அஸ்வின் நண்பர் கொடுத்த க்ளூ

டெல்லி அணியின் நட்சத்திரம் ரிஷப் பன்ட் விரைவில் சிஎஸ்கேவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

 

1 /7

இந்த ஆண்டு பல சுவாரஸ்யங்களை ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே அரங்கேறி வருகிறது. மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா தாவியிருக்கும் நிலையில், அடுத்தாக இன்னும் சிலர் வேறு அணிகளுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.  

2 /7

மும்பை அணியின் சீனியர் வீரர்களான பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அவர்களும் வேறு அணிகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துவிட்டனர்.  

3 /7

ஐபிஎல் ஏலம் முடிந்தபிறகு ஒரீரு வாரங்களில் யார் யார் எந்தெந்த அணிகளுக்கு செல்வார்கள் என்ற விவரம் முழுமையாக தெரியவரும். இந்த சூழலில் அஸ்வின் நண்பரான பிரச்சன்னா டிவிட்டரில் ஒரு பெரிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.  

4 /7

அதில், நீல நிறம் கொண்ட ஜெர்சியை அணிந்த அணியில் இருந்து மஞ்சள் நிறத்தை ஜெர்சியாக கொண்ட அணிக்கு முக்கிய வீரர் மாற போகிறார். அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஒருவேளை இந்த டிரேட் வெற்றிகரமாக முடிவடைந்தாலும், இரு அணிகளுக்கும் நன்மை ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார்.  

5 /7

இது ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியில் இருந்து பும்ரா, ரோகித் சர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 3 பேரில் யாரேனும் சிஎஸ்கே அணிக்கு வருகிறார்களா என்ற கேள்வி எழுந்தது.   

6 /7

ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் டெல்லி அணியும் நீல நிற ஜெர்சியை தான் பயன்படுத்தி வருகிறது. அண்மை காலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், தோனியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்.   

7 /7

தோனியின் வீட்டு நிகழ்ச்சிகள், பார்ட்டிகளில் ரிஷப் பண்ட் கட்டாயமாக இருந்து வருகிறார். அடுத்த சீசனுடன் தோனி ஓய்வுபெறும் நிலையில், அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்-ஐ கொண்டு தோனியின் இடத்தை நிரப்ப சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக பார்க்கப்படுகிறது.