தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்! டிசம்பரில் டும் டும் டும்!

Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அவை முற்றிலும் வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 
1 /6

தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் என்ற செய்திதான் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தனது நீண்டகால நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை வரும் டிசம்பர் 11ம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ள உள்ளார்.       

2 /6

கீர்த்தி மற்றும் ஆண்டனி கிட்டத்தட்ட 15 வருட நண்பர்கள் என்றும், கீர்த்தி சுரேஷ்க்கு பள்ளி பருவத்தில் இருந்தே ஆண்டனியை தெரியும் என்று கூறப்படுகிறது.   

3 /6

கோவாவில் நடைபெறும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் திரைபிரபலங்கள் யாரும் இல்லாமல், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

4 /6

கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனை தான் விரும்புகிறார் என்றும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் வதந்திகள் பரவியது. பிறகு இது பொய்யான தகவல் என்று கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.  

5 /6

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா படம் வெளியானது. சுமன் குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக தெறியின் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  

6 /6

பேபி ஜான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் கிறிஸ்மஸ் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.