Shani Margi 2023 in Kumbh: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். தற்போது சனி வக்ர நிலையில் இருப்பதால் விரைவில் வக்ர நிவர்த்தி நிலைக்கு மாறப் போகிறது. இதனால் சனியின் வக்ர நிவர்த்தி பலருக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.
வருகிற நவம்பர் 4 ஆம் தேதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடையும் பொழுது அதன் பலன்கள் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஒரு சில ராசிகள் மட்டும் அதீத பலன்களைப் பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்
ஜோதிடத்தைப் பொருத்தவரை நவகிரகங்களின் வக்ர நிலை மற்றும் வக்ர நிவர்த்தி நிலை மிகவும் முக்கிய நிலையாகப் பார்க்கப்படுகிறது. அப்போது கிரகங்களின் தாக்கங்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு நற்பலன்களாக இருக்கும், சில ராசிகளுக்கு அசுப பலன்களாக இருக்கும்.
சனி வக்ர நிவர்த்தி 2023: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது.
ரிஷபம்- ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி பல நன்மைகளைத் தரும். நீங்கள் வலுவான பண பலன்களைப் பெறுவீர்கள். பெரிய பதவி, மரியாதை, பெரிய சம்பளம் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். சனியின் வக்ர நிவர்த்தி உங்கள் வாழ்க்கையில் பல இனிமையான மாற்றங்களை கொண்டு வரும்.
சிம்மம்- சிம்ம ராசிக்காரர்கள் நவம்பரில் சனியின் வக்ர நிவர்த்தியால் மிகவும் சுப பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பதற்றம் முடிவுக்கு வரும், இதன் காரணமாக நீங்கள் மிகுந்த நிம்மதியை உணருவீர்கள். செயல்திறன் சிறப்பாக இருக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்- நவம்பர் முதல் சனி வக்ர நிவர்த்தி மகர ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரும். நீங்கள் நிறைய பயனடைவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு-சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் வெற்றி பெறலாம். அதிர்ஷ்டம் உங்கள் வசம் இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.