Aadhaar Card: ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை திருத்துவதற்கான விதிகள்..!

ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமன முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு மட்டுமின்றி பல தனியார் பணிகள் மற்றும் பிற தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக ஆதார் அட்டைக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஏனென்றால், மோசடிகளை தடுக்க வங்கிக் கணக்கு முதல், பான் எண் வரை அனைத்தையும் ஆதாருடன் இணைக்குமாறு அரசு கட்டாயமாக்கியுள்ளது.

1 /8

ஆதார் அட்டையில் உள்ள விபரங்கள் தவறாக இருந்தாலோ அல்லது மாற்ற வேண்டும் என்றாலோ ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாம். ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் அல்லது ஆதார் சேவை மையத்திற்குச் சென்று புதுப்பிக்கலாம்.

2 /8

ஆதாரில் 12 இலக்க எண் எழுதப்பட்டிருக்கும். அதில் உள்ள பெயரையோ புகைப்படத்தையோ, அல்லது பிற விபரங்களை மாற்ற நேரிடலாம். ஆதாரில் உள்ள ஏதேனும் தவறு இருக்கும்போது திருத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.

3 /8

பிறந்த தேதி: ஆதார் அட்டை வைத்திருப்பவர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பிறந்த தேதியை மாற்ற முடியும். முதல் முறை ஆதார் அட்டையில் தவறாக பதிவாகி இருந்தால், ஒரே ஒருமுறை மட்டுமே ஆதாரை மாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

4 /8

பெயர் மாற்றம்: ஆதார் அட்டை வழங்கும் UIDAI வாழ்நாள் முழுவதும் இரண்டு முறை மட்டுமே பெயரை மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

5 /8

முகவரி - வீடுகளை, இருப்பிடத்தை மாற்றும் சூழல் பலருக்கு இருக்கு,ம் இதனால், முகவரி மாறிக்கொண்டே இருப்பதால் யுஐடிஏஐ இது தொடர்பாக விதிகள் எதையும் ஏற்படுத்த்வில்லைவில்லை. முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.

6 /8

பாலினம் - ஆதார் அட்டையில் குறிப்ப்டப்பட்டுள்ள பாலினத்தை மாற்றுவதற்கான வாய்பு ஒருமுறை மட்டுமே கிடைக்கும்.

7 /8

புகைப்படம் - புகைப்படத்தை மாற்றுவதற்கு குறிப்பிட்ட விதி எதுவும் இல்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புகைப்படத்தை மாற்றிக்கொள்ளலாம்.

8 /8

மொபைல் எண் - மொபைல் எண்ணைப் புதுப்பிப்பதற்கான வரம்பு எதுவும் இல்லை. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.