Bed Tea: காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்..!!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் ஏற்படுவது மட்டுமின்றி, அல்சர் போன்ற கடுமையான நோய்களுக்கும் வழிவகுக்கும். தேநீரில் காஃபின், எல்-தியானைன் மற்றும் தியோபிலின் போன்ற பொருட்கள் உள்ளன. இது நிச்சயமாக உங்களுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும் என்றாலும், பெட் டீ பழக்கத்தால் தலைவலி, தசைவலி, மூட்டு வலி, நரம்புத் தளர்ச்சி போன்றவை ஏற்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.

1 /5

காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது பித்தம் ஏற்பாடு, குமட்டல் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும். பெட் டீ சாப்பிடுவதால், செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யாது. இது வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல், அஜீரணம், வாய்வு மற்றும் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.

2 /5

வெறும் வயிற்றில் தேநீர் அருந்தும் பழக்கம் அல்சர் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, உங்களின் இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும்.

3 /5

வெறும் வயிற்றில் தேநீர் அருந்தும் பழக்கமும் எலும்புகளை சேதப்படுத்தும். வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடலில் உள்ள வாத தோஷம் அதிகமாகும். இதனால் எலும்புகள் பலவீனமடைகின்றன. இதனால், சிறு வயதிலேயே மூட்டு வலி பிரச்சனை ஏற்படலாம்.

4 /5

டீ மற்றும் காபியில் காஃபின் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் கோபம், எரிச்சல் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும்.

5 /5

காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்தும் பழக்கம் இரத்த அழுத்த நோயாளிகளுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். தேநீரில் காஃபின் அதிகம் உள்ளது. காலை டீயில் உள்ள காஃபின் உடலில் வேகமாக கரைந்து, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை பாதிக்கிறது. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)