மறைந்த நடிகர் மயில்சாமி நடித்த சிறந்த நகைச்சுவை படங்கள்!

பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பலரது மனதையும் கவர்ந்த நடிகர் மயில்சாமி இன்று உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் அவர் நடிப்பில் வெளியான சிறப்பான படங்கள் சிலவற்றை காண்போம்.

 

1 /5

கடந்த 2014-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தில், அஜித்தின் மாமாவாக மயில்சாமி மரிக்கொழுந்து எனும் காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தில் அவரது நடப்பு அனைவரையும் கவர்ந்தது.  

2 /5

2015ம் ஆண்டில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'வேதாளம்' படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.  

3 /5

2015ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'காக்கி சட்டை' படத்தில் மயில்சாமி ஒரு நீதிமன்ற காட்சியில் நடித்திருந்தார்.  இந்த நகைச்சுவையான காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்திருந்தது.  

4 /5

2016ம் ஆண்டு ஜீவா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் வெளியான 'கவலை வேண்டாம்' படத்தில் மயில்சாமி ஜீவாவின் தந்தையாக நடித்து தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.  

5 /5

2004ம் ஆண்டு வெளியான ரொமான்டிக் திரைப்படமான கண்களால் கைது செய் படத்தில் மயில்சாமி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது.