போடு வெடிய…. தளபதி விஜயின் ’கோட்’ படத்தின் அப்டேட் வெளியீடு

Chinna Chinna Kangal The Goat Second Single: நாளை அதாவது ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது வயதை எட்டவுள்ளார். இதனால் இவரது பிறந்த நாள் கொண்ட்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

The Greatest Of All Time‌ Movie Update : தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து சிறு சிறு அப்டேட்டுக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது படம் தொடர்பாக மிகப்பெரிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

1 /8

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருக்கின்றன. இந்த படத்திற்கு GOAT - The Greatest Of All The Time (GOAT) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  

2 /8

இந்த படத்தில் (The GOAT - The Greatest Of All The Time) விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர்.  

3 /8

நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பிகில் படத்திற்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.   

4 /8

இதனிடையே கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என முன்னதாக வெளியான போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.   

5 /8

தி கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். மேலும் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ. மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே தி கோட் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.  

6 /8

'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெற்றுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே 93 கோடி ரூபாய்க்கு கோட் படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

7 /8

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து சிறு சிறு அப்டேட்டுக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது படம் தொடர்பாக மிகப்பெரிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

8 /8

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த The Greatest Of All Time படத்தின் இரண்டாவது பாடல் சின்ன சின்ன கண்கள் (Chinna Chinna Kangal) நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். Oru chinna treat #TheGoatSecondSingle #ChinnaChinnaKangal is releasing tomorrow at 6 PM Yes!! Indha paadalai paadiyavar…@actorvijay Sir A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh @agsentertainment#GOAT @thisisysrpic.twitter.com/ECXl5WNlEn — venkat prabhu (@vp_offl) June 21, 2024 #TheGoatSecondSingle #ChinnaChinnaKangal pic.twitter.com/bck3GGoGCo — Vijay (@actorvijay) June 21, 2024