Naga Chaitanya Sobhita Dhulipala Marriage Photos : தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபலாவும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
Naga Chaitanya Sobhita Dhulipala Marriage Photos : தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகராக விளங்கி வருபவர், நாக சைதன்யா. இவர், தற்போது பாலிவுட் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்துள்ளார். இந்த திருமண நிகழ்வு, அவர்களின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டது. இதில், தாலி கட்டிய பிறகு நடிகை சோபிதா நாக சைதன்யாவை பார்த்து புன்முறுவல் செய்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகராக விளங்கு வருபவர், நாக சைதன்யா. இவருக்கும், பாலிவுட் நடிகை சோபிதா துலிபலாவிற்கும் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது.
நாக சைதன்யா, முதலில் காதல் திருமணம் செய்து கொண்டது, நடிகை சமந்தாவைதான். 2017ஆம் ஆண்டில் திருமணம் செய்த இவர்கள், 2021ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இருவருமே வெளியில் கூறவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு, நாக சைதன்யா-சோபிதாவின் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதனால் கடுப்பான சமந்தா ரசிகர்கள் சிலர் இவர்கள் இருவரையும் இணையத்தில் கலாய்த்து வந்தனர்.
சமந்தாவுடன் திருமண உறவில் இருந்து விலகிய பின்னர், சோபிதாவும் நாக சைதன்யாவும் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து ஆரம்பித்த இவர்களின் காதல், இப்போது திருமண மேடை ஏறியிருக்கிறது.
நாக சைதன்யா, சோபிதாவின் திருமணம் டிசம்பர் 5ஆம் தேதியான நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அங்கு, நாக சைதன்யாவின் குடும்பத்திற்கு சொந்தமான அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் என்ற இடத்தில்தான் இந்த திருமணம் நடந்தது.
இந்த திருமண நிகழ்வில், நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
நாக சைதன்யா-சோபிதாவின் திருமண நிகழ்வில் நடந்த விஷயங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நாக சைதன்யா, சோபிதாவிற்கு தாலி கட்டியவுடன் அவர் கண் கலங்கி, தனது கணவரை பார்த்து சிரித்தார். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.