சனி பெயர்ச்சி 2025... ஏழரை நாட்டு சனியால் சிக்கலில் சில ராசிகள்.... சில எளிய பரிகாரங்கள்

Saturn Transit 2025: நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார். இதனால் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். சனி பகவான் எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொருத்து சனியின் காலங்கள் அறியப்படுகின்றன. அதாவது ஒரு ராசியில் இருக்கும்போது சனீஸ்வரரை ஜென்ம சனி என்று அழைப்பார்கள். 

2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி, நீதி கடவுள் என அழைக்கப்படும் சனி தேவன் கும்ப ராசியை விட்டு வெளியேறி மீன ராசியில் நுழைகிறார். சனி தேவன் மீன ராசியில் நுழைந்தவுடன், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள் நீங்கும். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும்.

1 /9

சனி பெயர்ச்சி 2025: ஜோதிட பொன்மொழியில், சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். 2025 மார்ச் 29ம் தேதி நடக்கக்கூடிய சனி பெயர்ச்சியால் அடுத்த இரண்டரை வருடம் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வழ்க்கையை தொடங்க உள்ள அதே நேரத்தில், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி கொஞ்சம் பாடாய படுத்தி எடுப்பார்.  எனினும், சில எளிய பரிகாரங்கள் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம்.

2 /9

ஏழரை நாட்டு சனி: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்கும். அதாவது 5 ஆண்டுகளுக்கு இன்னும் ஏழரை சனி இருக்கும். கும்ப ராசியினருக்கு பாத சனி, அதாவது இன்னும் 2 1/2 ஆண்டு ஏழரை சனி இருக்கும். மேஷ ராசியினருக்கு விரய சனி அதாவது 7 1/2 ஆண்டு இன்னும் ஏழரை சனி இருக்கும். 2025 ஜூன் 29ல் சனிப் பெயர்ச்சியாகும் சனி பகவான் 2027ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.

3 /9

மேஷ ராசி: சனி பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. உடல் ஆரோக்க்கியம் பாதிக்கும். பிள்ளையாரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். ஏழரை சனியின் தொடக்கம் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.  ஆனால், எதிர்கால பிரச்னைகளுக்கு இந்த காலகட்டத்திலேயே தயாராகிக் கொள்ள வேண்டும். இதனால் வரும் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கலாம். குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க வேண்டும். 

4 /9

கும்ப ராசி: மீன ராசியில் சனி சஞ்சரிக்கும் கால கட்டத்தில், கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி காலமான பாத சனியாக அமையும். பாத சனியால் கும்ப ராசியினருக்கு பணப்பிரச்னை, அதனால் ஏற்படும் மன்க் கஷ்டம் ஆகிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வேலையில் கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன்கள், உரிய அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இணக்கம் இருக்காது. கருத்து வேறுபாடு தான் இருக்கும். 

5 /9

மீன ராசி: 2025 சனி பெயர்ச்சியினால் மீன ராசியினருக்கு 2028ம் வருடம் வரை ஏழரை சனி நீடிக்கும். தற்போது கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியால் ஏழரை சனி தொடங்கியுள்ள நிலையில், விரய சனி காலம் நடக்கிறது. 2025ம் ஆண்டு மீனத்திற்கு வரும் போது, அதிக கஷ்டத்தை தரக்கூடிய ஜென்ம சனி ஏற்பட உள்ளது. இந்த காலத்தில் உடல் நலன் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மனதில் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படும். பொருளாதார நிலை பாதிக்கப்படும், பண இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

6 /9

ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள்: ஏழைகளுக்கு உதவுவதாலும், அன்னதானம் கொடுப்பதாலும், சனிபகவான் மனம் குளிரும். கடின உழைப்பாளிகளுக்கு சனீஸ்வரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சனிக்கிழமையன்று சனீஸ்வரனுடன் ஹனுமனை வழிபடுவதன் மூலம் ஏழரை சனியின் தாக்கங்களிலிருந்து நிவாரணம் பெறலாம். சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமை 11 முறை பாராயணம் செய்தால் சனியின் பாதிப்பு நீங்கும்.

7 /9

நீலமணி ரத்தினம்: சனியின் கோபப்பார்வையில் இருந்தும், சனி தோஷத்தில் இருந்தும் நிவாரணம் பெற நீலமணி ரத்தினம் என்னும் நீலக்கல்லை அணிவது உதவும். ப்ளூ சஃபையர்  என்னும் நீலக்கல்லை அணிவதன் மூலம், ஜாதகத்தில் ஏற்படும் ஏழரை சனி தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சனி தேவரின் எதிர்மறை தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கும் என்றும் நம்பப்படுகிறது. வாழ்க்கையில் சந்தித்து வரும் துன்பங்கள் மறையும் செல்வ செழிப்பு குறையாமல் இருக்கும்.

8 /9

வெள்ளி அல்லது பிளாட்டினம்: நீலக்கல் அணியும் போது மிகவும் கவனம் தேவை. இதனை நிபுணரின் ஆலோசனைப்படி சரியான நேரத்தில், சரியான முறைப்படி அணிய வேண்டும் அதுவுமில்லாமல் 100% இயற்கையானது தானா என சான்றளிக்கப்பட்டதா என பார்த்து அணியவேண்டும்.  நீலக்கல்லை வெள்ளி அல்லது பிளாட்டினம் கொண்டு செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிவததால் மட்டுமே சாதகமான பலன்களை பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள். தங்கத்தில் பதித்து அணிந்தால் எதிர்மறை பாதிப்புகளைத் தரலாம். 

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.