ராமாயணம் ஸ்டில்ஸ் லீக்.. அழகே பொறாமைப்படும் பேரழகியாக சாய் பல்லவி

Ranbir and Sai Pallavi from Ramayana: ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணம்' படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

Ranbir and Sai Pallavi from Ramayana: ராமாயணம் கதையில் ராமராக ரன்பிர் கபூர், சீதாவாக நடிகை சாய் பல்லவி நடிக்கும் காட்சியின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது.

1 /5

ஆதிபுருஷ்: ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டதுடன், கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

2 /5

ராமாயணம்: தற்போது இயக்குனர் நித்திஷ் திவாரி ரன்பீர் நடிகர் கபூரை வைத்து ராமாயணம் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார்.

3 /5

சாய் பல்லவி: தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் சாய் பல்லவி தற்போது தமிழில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டல் படத்தில் நடிக்கிறார்.

4 /5

பாலிவுட்டில் சாய் பல்லவி: தற்போது தென்னிந்திய படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி பாலிவுட்டில் பிரம்மாண்ட படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். சாய் பல்லவி ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இந்தியில் அறிமுகமாக உள்ளார். மேலும் அமீர் கான் மகனுக்கு ஜோடியாகவும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.  

5 /5

லீக்கான புகைப்படங்கள்: இந்த நிலையில், ராமாயணம் படப்பிடிப்பு தளத்தில் ராமராக ரன்பிர் கபூர், சீதாவாக நடிகை சாய் பல்லவி நடிக்கும் காட்சியின் புகைப்படம் கசிந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.