LDL என்னும் கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட.... சில சூப்பர் பவர் இலைகள்

Leaves That Burns LDL BAD Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஒட்டும் மெழுகு போன்ற கொழுப்பான கொலஸ்ட்ரால், இரத்த நாளங்களில்  படிவதால், இதயத்திற்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

கொலஸ்ட்ரால் அளவு, குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) அளவு அதிகரிக்கும் போது, ​​உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதன் காரணமாக, இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

1 /8

இதயம் ஆரோக்கியமாக இருக்க HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மிக குறைவாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில், இரத்த நாளங்களில் சேர்ந்துள்ள கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில இலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /8

கறிவேப்பிலை:  நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலை LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் எரிக்க உதவும். எனவே, கறிவேப்பிலையை தூக்கி எரியாமல் சாப்பிடுவதோடு, முடிந்தால், பச்சையாக கறிவேப்பிலையை சாப்பிடுதல், அல்லது கறிவேப்பிலை அரைத்து சேர்த்த மோர் அருந்துவதை வழக்கமாக கொள்ளவும்.

3 /8

துளசி இலைகள்: ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட துளசி இலை, மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புத மூலிகை. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. துளசி இலைகளை சாறு எடுத்து அல்லது தேநீர் தயாரித்து குடிக்கலாம்.

4 /8

வெந்தய கீரை: பொதுவாக இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரைகள், இதயத்திற்கு வலுவூட்டுபவை. அதிலும், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அடங்கி வெந்தய கீரை கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. எனவே, இதனை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

5 /8

முருங்கை கீரை: ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் கொண்ட முருங்கை இலைகள் அல்லது முருங்கை கீரை கொழுப்பை எரிக்கும் பண்புகளைக் கொண்டது. மேலும், இவை இதய தமனிகள் சுருங்குவதைத் தடுக்கவும் உதவுகிறது. 

6 /8

வேப்பிலை: கசப்புத் தனமை நிறைந்தது என்றாலும், வேப்ப இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட இலை . இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே கெட்ட கொழுப்பை எரிக்க வேப்பிலையை கஷாயம் வைத்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

7 /8

உடலில் கொலஸ்ட்ரால்  இருப்பதற்கான அறிகுறிகள்: உடல் சோர்வு,  அடிக்கடி ஏற்படும் குமட்டல், கை மற்றும் கால்களின் ஏற்படும் உணர்வின்மை, மூச்சுத் திணறல், கண் இமைகளில் மஞ்சள் நிற கொழுப்பு  இருப்பதற்கான தோற்றம் ஆகியவை அடங்கும். 

8 /8

பொறுப்புத் துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள இலைகளை சாப்பிடுவதற்கு முன், மருத்துவரை ஆலோசிக்கவும். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாயார்கள் மற்றும் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உட்கொள்ளும் முன் மருத்துவரை ஆலோசிக்கவும். இந்த இலைகளை உட்கொள்வதோடு, சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம்.