ஜில் ஜில் லெமன் சோடாவின் அற்புதமான நன்மைகள்

பல அறிவியல் ஆய்வுகள் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் ஆரோக்கிய நன்மைகளை தனித்தனியாக ஆய்வு செய்துள்ளன, ஆனால் இந்த இரண்டு பொருட்களின் ஒருங்கிணைந்த விளைவுகளை ஆதரிக்க அதிக ஆராய்ச்சி இல்லை. பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலவைகளை உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே விரிவாக காண்போம்.

1 /4

பெரும்பாலான மக்கள் தங்களின் உடலில் உள்ள அமில அளவைக் குறைக்கத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் pH அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். இதை பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை கலவை சிறப்பாக செய்யும்.  

2 /4

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடித்தால், அது முதுமையைத் தள்ளிப் போட்டு, சரும சுருக்கத்தைக் குறைத்து விடும்.

3 /4

பேக்கிங் சோடா எலுமிச்சை பானம், மிகச்சிறந்த ஆன்டாசிட்டாக செயல்பட்டு, அஜீரண பிரச்சனைகள், வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை விரைவில் தடுக்கும்.  

4 /4

எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கலவை உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடற்பயிற்சியின் போது சிறப்பாக ஈடுபட செய்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை குறையும். 

You May Like

Sponsored by Taboola