கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்! அதுவும் இவர் படத்திலா?

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

1 /5

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு ரியாலிட்டி ஷோவின் நடுவராக நடிக்கிறார், இப்படத்திற்கான இவரது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது.

2 /5

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி நடிகர் ஜீவாவும் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

3 /5

ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அவரது படத்தில் லோகேஷ் கேமியோ ரோலில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

4 /5

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

5 /5

இதுதவிர சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அன்பரிவ் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் முன்னணி நடிகர்களாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.