குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோ

கடந்த மே 01, தேவர்களின் குருவான வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். மேஷ ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்த குரு ரிஷபம் ராசிக்குள் நுழைந்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அனைத்து ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனின் ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ள குரு குழந்தைகள், மதம், திருமண வாழ்க்கை, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் கிரகமாக கருதப்படுகிறது. ரிஷப ராசியில் குரு ஓராண்டு காலம் தங்கியிருப்பது 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலனைத் தரும் என்பதை அறிந்து கொள்வோம்.

1 /12

மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இது தவிர, வரும் காலங்களில் மூதாதையர் சொத்துக்கள் உயரும். பணிபுரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி உங்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்படலாம். புதிய வேலை தேடிக் கொண்டு இருந்தால் அந்த விருப்பமும் நிறைவேறும்.

2 /12

ரிஷபம்: மே 1 முதல் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ள குருவால் உங்களுக்கு லாபம் உண்டாகும். ரிஷபம் ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேறும். மகிழ்ச்சிகரமான செய்திகளைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியை பெறுவீர்கள்.

3 /12

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தங்கள் பணியிடத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். பணப்பற்றாக்குறையால் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் மற்றும் செலவுகள் அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் எதிர்காலத்தில் சில நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

4 /12

கடகம்: குரு பெயர்ச்சி உங்கள் லாப ஸ்தானத்தில் நடந்துள்ளது. இதனால் கடக ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். விருந்தினர் வருகை தரலாம். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.

5 /12

சிம்மம்: மே 01 முதல் அடுத்த ஆண்டு வரை, சிம்ம ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக வாங்க நினைத்திருந்த சொத்துக்களை வாங்கும் யோகம் கூடும்.

6 /12

கன்னி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும். சமூகத்தில் நல்ல மரியாதையை பெறுவீர்கள். பயணங்களால் அபரிமிதமான பலன்களைப் பெறுவீர்கள். பங்குச் சந்தையில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.

7 /12

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கடன் கொடுத்திருந்தால், அதைத் திரும்பப் பெறுவதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

8 /12

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இப்போது காண்பீர்கள். சமூகத்திலும் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

9 /12

தனுசு: குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சில சிரமங்களுடன் வெற்றியை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பெயர்ச்சி உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம். இது தவிர, பணியிடத்தில் உங்கள் மூத்தவர்களை மகிழ்விக்க நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

10 /12

மகரம்: குரு பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு திருமண யோகத்தை தரும். வீட்டிற்கு விருந்தினர் வரலாம். உங்கள் கனவு நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணலாம். பணியிடத்தில் உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்கள் குடும்ப சூழ்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

11 /12

கும்பம்: குரு பெயர்ச்சியால் சில மனக் கவலைகள் ஏற்படலாம். செலவுகள் கூடும், எனவே தேவையற்ற செலவுகளை தவிரக்கவும். வேலையை விரிவுபடுத்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், மேலும் நீங்கள் முதலீடுகளையும் செய்யலாம். அயல்நாட்டு உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள்.

12 /12

மீனம்: குரு பெயர்ச்சி மீன ராசியினருக்கு, சில சிரமங்களுடன் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் லாபம் பெறுவதற்கான வாய்ப்பைக் காண்கிறீர்கள். இந்த பெயர்ச்சி உங்களை பல மத பயணங்களை மேற்கொள்ள வைக்கும்.