மெட்ராஸ் தினம் : ரீல்ஸ் போட்டியின் விதிமுறைகள்..! பரித்தொகை விவரம்

Madras Day Reels Contest: மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழநாடு அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து ரீல்ஸ் போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளது. 

Madras Day Reels Contest: இந்த ஆண்டு மெட்ராஸ் தினம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் ரீல்ஸ் போட்டியை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதில் தேர்வு செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 /9

மெட்ராஸ் தினம் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 'ரீல்ஸ்' போட்டி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது.   

2 /9

இதில் தேர்வு செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ரீல்ஸ் போட்டிக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

3 /9

இந்த போட்டியில் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7500 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.   

4 /9

ரீல்ஸ் போட்டியின் விதிமுறைகள் :  நபர் ஒருவர் இரண்டு ரிலீஸ் வரை போஸ்ட் செய்யலாம். ஒவ்வொரு ரீல்ஸ் 30 முதல் 90 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும்.   

5 /9

இந்த ரீல்ஸ்கள் மெட்ராஸின் பெருமைகளை, வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் இருக்க வேண்டும்.   

6 /9

கலாச்சாரம், கட்டடம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அம்சத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கலாம். சென்னை அருங்காட்சியகத்தின் அழகியலை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கலாம்.  

7 /9

ஒரிஜினலாகவும் புதிதாகவும் உருவாக பட்ட ரீல்ஸ்களாக இருக்க வேண்டும். எந்தவொரு போட்டியிலும் இதற்கு முன்னர் பயன்படுத்தியிருக்கக்கூடாது  

8 /9

இந்த ரீல்ஸ்களை வருகின்ற ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மட்டுமே பதிவிட வேண்டும்.  

9 /9

தமிழக அரசின் ரீல்ஸ் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் எடுக்கக்கூடிய ரீல்ஸ்களை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தமிழ்நாடு அருங்காட்சியகத்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தை கொலாபுரேட் செய்ய இன்வைட் பண்ண வேண்டும்.