IPL Fan Park: சேப்பாக்கத்தை விடுங்க... ஐபிஎல் தொடரை தமிழகத்தின் இந்த ஊர்களிலும் பார்க்கலாம்!

IPL 2024 Fan Park: ஐபிஎல் போட்டிகளை மைதானங்களில் மட்டுமின்றி Fan Park அழைக்கப்படும் பொதுவெளியில் அமைக்கப்படும் பெரிய திரைகளிலும் நீங்கள் கண்டு களிக்கலாம். அதன் முதற்கட்ட விவரங்களை இங்கு காணலாம்.

ஐபிஎல் நிர்வாகம் பல்வேறு நகரங்களிலும் ஒரு பொதுவெளியை தேர்வு செய்து அங்கு பெரிய திரை மற்றும் ஸ்பீக்கர் செட்களை அமைத்து அதில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும்.

 


 

 

1 /7

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி, மே மாதம் வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.   

2 /7

வரும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை டிக்கெட்டுகள் ஆன்லைன் விற்கப்பட்ட நிலையில், அதிக கிராக்கி இருந்ததால் பலருக்கும் டிக்கெட்டுகள் கிடைக்காத ஏமாற்றத்தில் உள்ளனர்.   

3 /7

சென்னையில் போட்டியை காண முடியவில்லை என்ற ஆதங்கம் பலருக்கு இருந்தாலும், அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, IPL Fan Park மூலம் இலவசமாக ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கலாம். 

4 /7

அதாவது, ஐபிஎல் நிர்வாகம் பல்வேறு நகரங்களிலும் ஒரு பொதுவெளியை தேர்வு செய்து அங்கு பெரிய திரை மற்றும் ஸ்பீக்கர் செட்களை அமைத்து அதில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும். இதனை காண வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இதனை ரசிகர்கள் நல்ல காற்றோத்துடன் நண்பர்கள், குடும்பத்தினர் சூழ போட்டியை மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டத்துடனும் கண்டுகளிக்கலாம்.   

5 /7

அந்த வகையில், ஐபிஎல் நிர்வாகம் முதல்கட்டமாக எங்கெங்கு IPL Fan Park-ஐ ஏற்பாடு செய்திருக்கின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் இரண்டு நகரங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

6 /7

உத்தர பிரதேசத்தின் மீரட், வாரணாசி, ராஜஸ்தானின் பைகானர், மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூர், மகாராஷ்டிராவின் சோலபூர், நாக்பூர், உத்தரகாண்டின் டேராடூன், குஜராத்தின் ராஜ்கோட், நாடியட், கர்நாடகாவின் மைசூர், ஜார்க்கண்டின் ஜம்ஸத்பூர், பஞ்சாபின் பாட்டியாலா, தெலங்கானாவின் நிஸாமாபாத் ஆகிய நகரங்களில் வெவ்வேறு தினங்களில் IPL Fan Park ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரத்தை நீங்கள் புகைப்படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.   

7 /7

தமிழ்நாட்டில் மதுரை மற்றும் கோயம்புத்தூரில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரையில் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியும், 23ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப் - டெல்லி போட்டியும், கொல்கத்தா - ஹைதராபாத் போட்டியும் ஒளிபரப்பப்படும். கோயம்புத்தூரில் மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் ஆர்சிபி - கொல்கத்தா போட்டியும், லக்னோ - பஞ்சாப் போட்டியும், மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் குஜராத் - ஹைதராபாத் போட்டியும், டெல்லி - சென்னை போட்டியும் ஒளிப்பரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.