ஆணாக பிறந்த ஒருவரால் கர்ப்பம் தரிக்க முடியுமா? ஆமாம் என்று சொல்கிறது நிதர்சனம்... இளைஞர் ஒருவர் 4 மாத கர்ப்பமாக இருkகிறார். அவர், கருவில் 'குழந்தை பொறுமையின்றி காத்திருக்கிறது' என்றும் சொல்கிறார். கர்ப்பமாகி 4 மாத குழந்தையை வயிற்றில் சுமக்குக்ம். இந்த இளைஞரின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த வித்தியாசமான விஷயம் பிரிட்டனின் பாஸ்டனில் இருந்து வெளிவந்துள்ளது. பாஸ்டனில் வசிக்கும் 18 வயதான மைக்கி சேனல் (Mikey Chanel) நான்கு மாத கர்ப்பிணி!
டாக்டர்களின் கூற்றுப்படி, Mikey Chanel-இன் உடலில் ஒரு பெண் இனப்பெருக்க அமைப்பு (Female Reproductive System) உள்ளது. இதனால் அவர் கர்ப்பமாகிவிட்டார்.
மைக் (Mikey Chanel) தனது தாயின் கருவில் இருந்தபோது, பெண் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தாலும், பிறந்தது ஆண் குழந்தை. மைக், ஆண் குழந்தையாகவே வளர்க்கப்பட்டாலும், அவர் தனக்குள் வித்தியாசமாக உணர்ந்தார். சிறுவயது முதலே பெண்களுக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் மைக்குக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
சிறுவயது முதலே சிறுமிகளைப் போலவே நடந்துக் கொண்ட மைக், விளையாடும் போதும் ஒரு பெண் குழந்தையைப் போலவே விளையாடுவாராம். பெண்களைப் போல அலங்காரம் செய்வது, பொம்மைகளை வைத்து விளையாடுவது என பெண்ணைப் போலவே இருக்கும் விருப்பம் மைக்கிற்கு இருந்ததாக அவரது தாய் கூறுகிறார்.
பள்ளியில் படிக்கும் போது, வளர்ந்த பின் என்னவாக விரும்புவாய் என்ற கேள்விக்கு மைக்கி சேனல் (Mikey Chanel) என்ன சொன்னார் தெரியுமா? 'நான் பெற்றோராக வேண்டும் என்று கனவு காண்கிறேன்’. தன்னுடைய கனவு இப்போது நிறைவேறப் போகிறது என்று மைக் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
'விழிப்புணர்வை பரப்புவதற்காக எனது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் (Social Media) பகிர்ந்துள்ளேன்' என்று மைக் சேனல் (Mikey Chanel) கூறுகிறார்.
என்னை பலரும் Gay என்று கிண்டல் செய்வார்கள். சிலர் என்னை Gay என்று அழைப்பார்கள். வேறு பலரும் பலவிதமான வார்த்தைகளால் கிண்டல் செய்வார்கள். மைக் இந்த குழந்தைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். மைக் 'நான் நாட்களை ஒவ்வொன்றாக எண்ணி வருகிறேன், விரைவில் என் குழந்தையின் முகத்தைப் பார்க்க விரும்புகிறேன்' என்கிறார்.
குழந்தை பெறுவது உலகில் இயல்பானதே. ஆனால், ஆணால் கர்ப்பமாக முடியுமா? நிதர்சனமான உதாரணம் Mikey Chanel என்ற பிரிட்டன்வாசி